4) ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அஸ்வின் ஜடேஜா வெளியேற்றம்
நம்ம அஷ்வின் – ஜடேஜா கூட்டணிக்கு தான் இந்த பில்டப். இருவரும் அதுக்கு தகுதியானவர்கள் தானே… ஆனால், கடந்த ஆறு மாதங்களாக இருவருக்கும் இந்திய அணியில், குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படவேயில்லை. ஜூன் – ஜூலையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர் தான் இவர்கள் விளையாடிய கடைசி தொடர். அதன் பிறகு, இன்று வரை அஷ்வினுக்கும், ஜடேஜாவுக்கும் டெஸ்ட் தொடர்களை தவிர அணியில் இடம் கிடைக்கவில்லை.
இவர்களுக்கு பதில் குல்தீப் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகிய இருவரையும் களமிறக்கியது பிசிசிஐ. இவர்கள் தங்களை நிரூபித்து வந்தாலும், அஷ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு தற்போது இணையாக முடியாது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
ஆனால், இவர்கள் இருவரும் தோனியின் சகாக்கள் என்பதனாலேயே கொஞ்சம் கொஞ்சமாக அணியில் இருந்து ஓரம்கட்டப்படுவதாக கூறப்படுகிறது. தோனி கேப்டனான புதிதில், அப்போது அணியில் இருந்த சில மூத்த வீரர்களை, மோசமான பெர்ஃபாமன்ஸ் காரணமாக அணியில் இருந்து நீக்கினார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், பீக் ஃபார்மில் இருந்த அஷ்வின், ஜடேஜாவை கேப்டன் கோலி – கோச் ரவி சாஸ்திரி இணை தொடர்ந்து நீக்கி வருவது சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.