3) மீண்டும் எதுக்கு இலங்கை தொடர் கடுப்பாகி பி.சி.சி.ஐ மீது காண்டானா விராட் கோலி
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – இலங்கை தொடருக்கு முன்பாக நடந்த பிரஸ் மீட்டில், கேப்டன் விராட் கோலி சொன்ன ஒரு வார்த்தையை கேட்டு அதிர்ந்தே போய்விட்டது பிசிசிஐ. ‘அவரு தெளிவா பேசுலயா?….. இல்ல அவரு பேசுவது நமக்கு தெளிவா புரியலையா?-னு’ பெரிதாக கன்ஃப்யூஸ் ஆகிவிட்டது பிசிசிஐ.
அப்படி என்ன சொன்னார் கோலி? செய்தியாளர் ஒருவர், “போன முறை தான் இந்திய அணி இலங்கை சென்று விளையாடி வந்தது. இப்போது மீண்டும் அவர்கள் இங்கு வந்து விளையாடுகிறார்கள். இந்த தொடர் தேவைதானா?” என்று கேள்வி எழுப்ப, இதுதான் சரியான தருணம் என்று அதற்கு பதிலளித்த கோலி, “பிசிசிஐ-யிடம் ஒழுங்கான திட்டமிடல் இல்லை. இந்த இலங்கை தொடர் முடிந்த அடுத்த இரண்டு நாட்களில் நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட வேண்டும். இதுபோன்ற மோசமான திட்டமிடலால் அணியின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இருப்பினும், அட்டவணைப்படி நாங்கள் விளையாட வேண்டும். அது எங்கள் கடமை” என்று குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல கோலி பதில் சொல்ல, ஷாக் ஆனது பிசிசிஐ.
அதன்பிறகு, நடந்த பிசிசிஐ நிர்வாகிகள் சிறப்புக் கூட்டத்தில், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா விளையாடவிருந்த போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்தது.