1) கோலி – கும்ளே சண்டை
‘எங்களை ஸ்கூல் பிள்ளைகள் போல் நடத்துகிறார்’ என்பதுதான், கும்ப்ளே மீது பிசிசிஐ-யிடம் கோலி வைத்த குற்றச்சாட்டு. இதனால் கோலிக்கும், கும்ப்ளேவுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்திய அணியின் மற்ற வீரர்கள் இதை சைலண்டாக வேடிக்கை பார்க்க, சாம்பியன்ஸ் டிராபி முடிந்தவுடன் தானாக பதவி விலகினார் கும்ப்ளே. போகும்போது, “கடந்த ஒருவருடமாக இந்திய அணி பெற்ற வெற்றிக்கு கேப்டனும், சக வீரர்களுமே முழு காரணம்” என்று பாராட்டி தன் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதன்பின், கேப்டன் விராட் நடந்து கொண்ட விதம் தான் உண்மையில் குழந்தைத்தனமாக இருந்தது. 2016-ல் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்ற கும்ப்ளேவை வரவேற்கும் விதமாக, கோலி தனது ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட்டை நீக்கினார். அப்போதுதான், எந்தளவிற்கு கோலிக்கு கும்ப்ளே மீது வெறுப்பு இருந்திருக்கிறது என்பதை அனைவரும் அறிய முடிந்தது. என்னதான் கோபம், வெறுப்புகள் இருந்தாலும், இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாக கோலி நடந்து கொண்டது குறித்து பிசிசிஐ எதுவும் கருத்து கூறாமல் ‘கப்சிப்’ மோடிலேயே இருந்தது.
இந்த விவகாரம் குறித்து காரசாரமாக கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், “உங்களுக்கெல்லாம் இன்று பயிற்சி போதும். போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், அல்லது ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறும் பயிற்சியாளர் தான் வேண்டும். கொஞ்சம் கடினமாக இருந்தால், உடனே அவரையே நீங்கள் மாற்றிவிடுவீர்கள். இப்படி எந்த வீரர் நினைக்கிறாரோ அவரைத் தான் முதலில் அணியில் இருந்து நீக்க வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். இதற்கும் பிசிசிஐ ‘N காது K காது’ என்ற மோடில் தான் இருந்தது.
அதன்பிறகு, பலத்த போட்டிக்கு இடையே ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு அந்த பலத்த போட்டியை கொடுத்தது சேவாக் தான். ஒருவேளை சேவாக் கோச்சாகி இருந்தால், அணியில் பூகம்பமே வெடித்திருக்கும்.
எது எப்படியோ, ரசிகர்களுக்கு தேவை நல்ல என்டர்டெயின்மண்ட்.. அதைத் தொடர்ந்து அளிக்கும் பட்சத்தில் கேப்டனுக்கும், கோச்சுக்கும் பிரச்சனை இல்லை