3.இலங்கை 443/9
2006ல் நமக்கு கிடைத்த வாய்ப்பை ஏன் விட வேண்டும் என இலங்கை அணி செய்த சம்பவம் இது. தற்போது உள்ள அணி போல இல்லாமல் அப்போது இருந்த இலங்கை அணி பலமான அணியாகும். அதிலும் பேட்டிங்கில் சிறந்த அணியாக விளங்கியது. நெதர்லாந்து அணிக்கெதிராக ஜெயசூர்யா, ஜெயவர்த்தனா, சங்கக்காரா, திலசன் என அனைவரும் போட்டு தள்ள 50 ஓவர்களுக்கு 443 ரன்னை குவித்தது. இந்த சாதனை 10 வருடங்கள் நீடித்தது. பின்னாடி இங்கிலாந்து அணி 2016ல் முறியடித்தது.