உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் பட்டியிலில் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சாதனையின் பக்கம் எந்த வீரரும் நெருங்க முடியாத அளவில் இருக்கின்றனர்.
இங்கிலாந்தில் 12-வது உலகக் கோப்பைப் போட்டி வரும் 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதிவரை நடக்கிறது. 11 மைதானங்களில் 46 ஆட்டங்கள் நடக்கின்றன. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி ரவுண்ட்ராபின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்களை அடித்த பேட்ஸ்மேன் எனும் பட்டியலை ஆய்வு செய்தால் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சாதனை மலைக்க வைக்கிறது. அவரின் சாதனைக்கு பக்கத்தில் கூட இந்த முறை உலகக் கோப்பையில் விளையாடும் எந்த நாட்டு அணி வீரர்களும் நெருங்கவே முடியாது.
6 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் உலக அளவில் உலகக் கோப்பைப்ப போட்டியில் அதிக ரன்களைச் சேர்ந்த பேட்ஸ்மேன் எனும் சாதனையை இன்னும் தக்கவைத்து வருகிறார். சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று ஏறக்குறைய ஒரு உலகக் கோப்பைப் போட்டி முடிந்த நிலையிலும் இன்னும் அதை யாரும் முறியடிக்கவில்லை.
அப்படிப்பட்ட சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு, பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தனது கனவு உலகக் கோப்பை சர்வதேச அணியில் இடம் தரவில்லை, மாறாக இன்சமாம் உல் ஹக்குக்கு இடம் ஒதுக்கியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. இனி முதல் 5 இடங்களில் இருக்கும் டாப் ரன்ஹிட்டர்ஸ் குறித்துப் பார்க்கலாம்.
#5.ஏபி டிவில்லியர்ஸ்
5-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் 360 டிகிரி வீரர் என்று அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் இடம் பெற்றுள்ளார். 2007 முதல் 2015ம் ஆண்டு உலகக் கோப்பைவரை மட்டுமே விளையாடியுள்ள டிவில்லியர்ஸ் தனது அபாரமான பேட்டிங் திறமையால், 23 போட்டிகளில் 1,207 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 166 நாட் அவுட் ஆகும். டிவில்லியர்ஸ் சராசரி உலகக்கோப்பையில் 66 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட் 117 ஆகும். உலகக் கோப்பைப் போட்டியில் 4 சதங்கள், 6 அரைசதங்களை டிவில்லியர்ஸ் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 121 பவுண்டரிகளையும், 37 சிக்ஸர்களையும் டிவில்லியர்ஸ் விளாசியுள்ளார்.