#2.ரிக்கி பாண்டிங்
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கேப்டன் என்று அழைக்கப்படும் ரிக்கி பாண்டிங் 2-வது இடத்தில் உள்ளார். கடந்த 1996 முதல் 2011 உலகக் கோப்பைகளில் பாண்டிங் விளையாடியுள்ளார்.
46 போட்டிகளில் விளையாடியுள்ள ரிக்கி பாண்டிங் 1,743 ரன்கள் குவித்துள்ளார். இதில் பாண்டிங்கின் சராசரி 45.86 ரன்களாகும். பாண்டிங் 5 சதங்கள், 6 அரைசதங்களை 42 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளார். கடந்த 2003-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இறுதிப்போட்டியில் 140 ரன்கள் அடித்ததே பாண்டிங்கின் அதிகபட்சமாகும். ஒட்டுமொத்தமாக பாண்டிங் 145பவுண்டரிகளையும், 31 சிக்ஸர்களையும் நொறுக்கியுள்ளார்.