Use your ← → (arrow) keys to browse
#1.சச்சின் டெண்டுல்கர்
இந்தியாவின் கிரிக்கெட் கடவுளாக ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 6 உலகக் கோப்பைப்போட்டியில் விளையாடியுள்ளார். கடந்த 1992, 1996, 1999, 2003, 2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் சச்சின் இந்திய அணியில் விளையாடியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின் 45 ஆட்டங்களில் விளையாடிய 2, 278 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் சச்சினின் சராசரி 56.65 ரன்களாகும். ஒட்டமொத்தமாக 6 சதங்கள் அடித்துள்ளார்.இதுவரை எந்த நாட்டு பேட்ஸ்மேனும் 6 சதங்கள் உலகக் கோப்பையில் அடித்ததாக வரலாறு இல்லை. 44 இன்னிங்ஸ்களில் 14 அரைசதங்கள் அடித்துள்ள சச்சினின் அதிகபட்சம் 152 ரன்களாகும். 241 பவுண்டரிகளும், 27 சிக்ஸர்களும் சச்சின் அடித்துள்ளார்.
Use your ← → (arrow) keys to browse