அடுத்த போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்: ரசிகர்கள் கவலை 1

ஹாமில்டனில் நாளைமறுநாள் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் விலகியுள்ளனர்.

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே முடிந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்டிற்கு காயம் ஏற்பட்டது. விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் போல்ட் நாளைமறுநாள் வெலிங்டனில் தொடங்கும் 2-வது டெஸ்டில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்: ரசிகர்கள் கவலை 2

அதேபோல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கொலின் கிராண்ட்ஹோமுக்கு வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவரும் 2-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

ஆகையால், ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், லூக்கி பெர்குசன், டாட் ஆஸ்லே ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டு்ளளனர்.

 

முன்னதாக,

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மவுன்ட் மவுங்கனுயில் நடைபெற்ற இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேவேளையில் நியூஸிலாந்து 9 விக்கெட்கள் இழப்புக்கு 615 ரன் கள் குவித்து டிக்ளேர் செய்தது. பிஜே வாட்லிங் 205 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 126 ரன்கள் விளாசினர். 2 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 27.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது

அடுத்த போட்டியில் இருந்து நட்சத்திர வீரர் விலகல்: ரசிகர்கள் கவலை 3

கடைசி நாளான நேற்று நெய்ல் வாக்னரின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சீரான இடை வெளியில் ஆட்டமிழந்து வெளி யேறினர். ஜோ ரூட் 11, ஜோ டென்லி 35, பென் ஸ்டோக்ஸ் 28, போப் 6, ஜாஸ் பட்லர் 0, ஜோப்ரா ஆர்ச்சர் 30, ஸ்டூவர்ட் பிராடு 0 ரன்களில் நடையை கட்ட இங்கிலாந்து அணி 96.2 ஓவர்களில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஒரு கட்டத்தில் 121 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்த இங்கிலாந்து அணி கடைசி 6 விக்கெட்களை 76 ரன்களுக்கு தாரை வார்த்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் நெய்ல் வாக்னர் 5, மிட்செல் சாண்ட் னர் 3 விக்கெட்கள் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் விளாசிய நியூஸிலாந்தின் பிஜே வாட்லிங் தேர்வானார். இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் ஹாமில்டன் நகரில் வரும் 29-ம் தேதி தொடங்கு கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *