இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மயங்க் அகர்வாலின் சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ஏ அணி.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் – வெஸ்ட் இண்டீசை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ – இந்தியா ஏ அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி பேட்டிங் தேர்வு செய்தது. சந்தர்பால் ஹேமராஜ் 45 ரன்களும், ஜேசன் மொகமது 31 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை.
இந்திய வீரர்களின் துல்லிய பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் சிக்கினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 49.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேவன் தாமஸ் 64 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ஏ அணி சார்பில் தீபக் சஹார் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரக இறங்கிய மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 102 ரன்களில் அவுட்டானார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஷுப்மான் கில் அரை சதமடித்து அசத்தினார்.
இறுதியில், இந்தியா ஏ அணி 38.1 ஓவரில் 222 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.