இந்தியா தோற்றால் என்ன? இன்று தோனியின் பிறந்தநாள் - ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் 1
இந்திய அணி தோற்றால் என்ன, எங்களுக்கு கொண்டாட வேறு ஒரு விசயம் இருக்கிறது என தோனியின் 37வது பிறந்தநாளை முரட்டு தனமாக கொண்டாடி வருகின்றனர் இந்திய ரசிகர்கள்
இங்கிலாந்து – இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் இரவு 10 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டியில் இங்கிலந்து அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்களிலும், ஷிகர் தவான் 10 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்தியா 3 விக்கெட்டுக்கு 22 ரன்கள் எடுத்து தத்தளித்தது.ட்ஜ்ஹொனி கொஹ்லிஇந்தியா தோற்றால் என்ன? இன்று தோனியின் பிறந்தநாள் - ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் 2
அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், சுரேஷ் ரெய்னாவும் நிதானமாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது சுரேஷ் ரெய்னா 27 ரன்னில் அவுட்டானார். அடுத்து கோலியுடன் எம்.எஸ்.தோனி சேர்ந்தார். கோலி 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  விக்கெட் இழப்புக்கு  ரன்கள் எடுத்துள்ளது. தோனி ரன்களும், பாண்ட்யா ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் ஜேக் பால், பிளங்கட், அடில் ரஷித் ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.இந்தியா தோற்றால் என்ன? இன்று தோனியின் பிறந்தநாள் - ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் 3
இதையடுத்து, 149 ரன்களை இலக்காக கொண்டு இங்கிலந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இறங்கினர்.
உமேஷ் யாதவ் தனது சிறப்பான பந்து வீச்சால் தொடக்க ஆட்டக்க்காரர்களை வெளியேற்றினார். ராய் 15 ரன்னிலும், பட்லர் 14 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஜோ ரூட் 9 ரன்னில் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஒருபுறம் நிதானமாக ஆடினார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.இந்தியா தோற்றால் என்ன? இன்று தோனியின் பிறந்தநாள் - ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள் 4
இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹேல்ஸ் 41 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து டி 20 தொடர் 1-1 சமனிலையில் உள்ளது.
இந்த தோல்வியையும் பொருட்படுத்தாமல் தோனியை கொண்டாடி வருகின்றனர் இந்திய ரசிகர்கள்.

https://twitter.com/Sudhir10dulkar/status/1015284695783825408

https://twitter.com/SirJadejaaaa/status/1015273627636269056

https://twitter.com/SirJadejaaaa/status/1015298461363662848

https://twitter.com/imDhoni_fc/status/1015303847504314368

https://twitter.com/AdrisyaDeeksha/status/1015235546879148032

https://twitter.com/iam_za1d/status/1015261373356339200

https://twitter.com/Beeblebrroxx/status/1015236685808861184

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *