நியூசிலாந்து அணிக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பை லீக் போட்டியில், பவுலர்கள் அசத்த, 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இங்கிலாந்தில் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெர்பியில் இன்று நடந்த் 27வது லீக் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர் கொள்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும், தோல்வியை சந்திக்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் மிதாலி ராஜ், சதம் அடித்து கைகொடுக்க, இந்திய அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது.
எட்டக்குடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து பெண்கள் அணி, ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டது. அந்த அணியின் சாட்டர்வெயிட் (26), மார்டின் (12) ஆகியோரைத்தவிர மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை.
இதையடுத்து நியூசிலாந்து அணி, 25.3 ஓவரில், 79 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 186 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்குள் அம்சமாக நுழைந்தது. நியூசிலாந்து அணி பரிதாபமாக வெளியேறியது.
இந்த வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றதால், இந்திய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர்.