ஹர்திக் பாண்டியா அபார ஆட்டம்! 37 ரன் வித்யாசத்தில் சென்னை அணி தோல்வி! 1

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அம்பத்தி ராயுடு தொடர்ந்து ரன் எடுக்க தடுமாறி வருகிறார்.

12வது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சென்னை அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது, 4வது போட்டியாக மும்பை அணியுடன் வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 15வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய மும்பை அணியில், தொடக்க ஆட்டக்காரரான டி காக் 4 (7) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா வீசிய பந்தில் ரோகித் ஷர்மா 13 (18) ரன்கள் எடுத்திருந்தபோது தோனியிடம் கேட்ச் ஆனார்.ஹர்திக் பாண்டியா அபார ஆட்டம்! 37 ரன் வித்யாசத்தில் சென்னை அணி தோல்வி! 2

அதன்பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நிலைத்து விளையாடினார். இதற்கிடையே வந்த யுவராஜ் சிங் வந்த வேகத்தில் 4 (6) மட்டுமே எடுத்து நடையை கட்டினார். பின்னர் வந்த குருனல் பாண்ட்யா சூர்யகுமாருடன் சேர்ந்து மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டார். மும்பையின் ஸ்கோர் 112 ரன்கள் இருந்தபோது குருனல் பாண்ட்யா 42 (32) ரன்களில் வெளியேறினார். அரை சதம் அடித்த சூர்யகுமார் 59 (43) ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் கிரான் பொல்லார்ட் சில சிக்ஸர்கள் அடித்து மும்பை ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 170 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 25 (8) ரன்களுடனும், பொல்லார்ட் 17 (7) ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. பின்னர், 171 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வரும் சென்னை அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இதில் அம்பத்தி ராயுடு தான் சந்தித்த முதல் பந்தில் ஆட்டமிழந்தார். வாட்சன் 3 ரன்னில் ஆட்டமிழக்க, சற்று நேரம் தாக்கு பிடித்த ரெய்னா 16 ரன்னில் வெளியேறினார்.ஹர்திக் பாண்டியா அபார ஆட்டம்! 37 ரன் வித்யாசத்தில் சென்னை அணி தோல்வி! 3

இந்தத் தொடரில் அம்பத்தி ராயுடு தொடர்ந்து சொதப்பி வருகிறார். முதல் போட்டியில் 52 பந்துகளில் 28 ரன் எடுத்தார். ஆனால், இரண்டாவது போட்டியில் 5 பந்துகளில் 5 ரன்னும், மூன்றாவது போட்டியில் 8 பந்துகளில் ஒரு ரன்னும்தான் அடித்தார். இன்றைய போட்டியிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

தொடர்ந்து சொதப்பி வரும் ராயுடுவை அடுத்தப் போட்டியிலாவது தோனி மாற்ற வேண்டும். அவருக்கு பதிலாக வேறு யாரையாவது தொடக்க வீரராக களமிறக்க வேண்டும். இல்லையென்றால், பின் களத்திலாவது அவரை இறக்க வேண்டும். ஷாம் பில்லிங்ஸ், முரளி விஜய் உள்ளிட்ட யாருக்கேனும் அவருக்கு பதிலாக வாய்ப்பு கொடுக்கலாம்.

https://twitter.com/v_vijay5/status/1113505198364811264

https://twitter.com/bloodpunx/status/1113506168121438208

https://twitter.com/ahirhari03/status/1113506071199461376

 

https://twitter.com/beingsaurabh23/status/1113505730047434754

https://twitter.com/CMadhankumar96/status/1113505484563042304

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *