ஆன்ட்ரு ரஸல் காட்டடி!! கொல்கத்தா அபார வெற்றி!! ட்விட்டர் ரியாக்சன் 1

கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி 181 ரன்கள் குவித்துள்ளன.

2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய ஹைதராபத் அணியின் தொடக்க வீரர்களான ஜானி பார்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.ஆன்ட்ரு ரஸல் காட்டடி!! கொல்கத்தா அபார வெற்றி!! ட்விட்டர் ரியாக்சன் 2

ஜானி 39 (35) ரன்களில் வெளியேற, தொடர்ந்து விளையாடிய வார்னர் அரைசதம் அடித்தார். இதையடுத்து வார்னார் 85 (53) ரன்களில் அவுட் ஆக, இடையே வந்த விஜய் ஷங்கர் அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் ஆல்ரவுண்டர் ரஸ்ஸல் 2 விக்கெட்டுளை கைப்பற்றினார்.

டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். வார்னர், பேர்ஸ்டோ ஆட்டத்தைத் தொடங்கினார்கள். பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் ஓவரில் பொறுமை காத்த வார்னர், பியூஷ் சாவ்லா வீசிய 2-வது ஓவரே நொறுக்கி எடுத்தார்.

சாவ்லா வீசிய 2-வது ஓவரில் இரு பவுண்டரிகளையும், பிரசித் கிருஷ்ணா வீசிய 3-வது ஓவரில் ஒரு பவுண்டரியையும் வார்னர் விளாசினார்.

4-வது ஓவரை பியூஷ் சாவ்லா வீசியபோது, பேர்ஸ்டோ ஸ்டிரைட் டிரைவில் ஒரு சிக்ஸர் அடித்து ரன் வேட்டையைத் தொடங்கினார். இதனால் ஓவர்கள் மாற்றப்பட்டன. 5.3 ஓவர்களில் சன் ரைசர்ஸ் அணி 50 ரன்களை எட்டியது.

பெர்குஷன், நரேன் பந்துவீச அழைக்கப்பட்டனர். பெர்குஷன் வீசிய ஓவரில் வார்னர் ஒருபவுண்டரியும், சுனில் நரேன் வீசிய 6-வது ஓவரில் இரு பவுண்டரிகளையும் வெளுத்தார் வார்னர். ஓவருக்கு ஒருபவுண்டரி, அல்லது சிக்ஸர் வீதம் வார்னர் அடித்ததால், ரன்ரேட் சீராக உயர்ந்தது. முதல் 6 ஓவர்கள் பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் அணி 54 ரன்கள் குவித்தது.ஆன்ட்ரு ரஸல் காட்டடி!! கொல்கத்தா அபார வெற்றி!! ட்விட்டர் ரியாக்சன் 3

7-வது ஓவரை வீச வந்த குல்தீப்பையும் வார்னர் விட்டுவைக்கவில்லை. குல்தீப் ஓவரிலும் ஒரு பவுண்டரியை வெளியே தள்ளினார் வார்னர்.

ஆன்ட்ரூ ரஸல் வீசிய 9-வது ஓவரை வார்னர் பொளந்து கட்டினார். ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 31 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார் வார்னர். வார்னருக்கு ஐபிஎல் போட்டியில் 37-வது அரை சதமாக அமைந்தது.

 

 

https://twitter.com/TylerD91/status/1109822040863895552

 

https://twitter.com/IssaJokeBreh/status/1109821426276749312

https://twitter.com/kaybhafc90/status/1109821365861969920

 

https://twitter.com/RamboFYI/status/1109821350955364352

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *