பும்ராவை தரக்குறைவாக பேசிய பாக் வீரர் அப்துல் ரசாக்: வச்சு செய்த இந்திய ரசிகர்கள் 1

இந்திய வேகப் பந்து வீச்சாளர் பும்ராவை குழந்தை பந்து வீச்சாளார் என்று கூறியதற்காக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் முன்னாள் ஆல்ரவுண்டரான அப்துல் ரசாக் அந்நாட்டின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர் காணல் ஒன்றில் தனது கிரிக்கெட் பயணத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து அப்துல் ரசாக் கூறியிருப்பது ரசிகர்களிடையே சர்ச்சையாகி உள்ளது.

அப்துல் ரசாக் கூறியிருப்பதாவது, “ நான் எனது கிரிக்கெட் அனுபவத்தில் மெக்ராத், வசிம் அக்ரம் உள்ளிட்ட உலகின் சிறப்பான பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டுள்ளேன். அவ்வாறு இருக்கையில் பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களை எதிர் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. பும்ரா என் முன்னால் குழந்தை பந்துவீச்சாளர். அவரை நான் சிறப்பாக எதிர் கொள்வேன்”என்றார்.பும்ராவை தரக்குறைவாக பேசிய பாக் வீரர் அப்துல் ரசாக்: வச்சு செய்த இந்திய ரசிகர்கள் 2

இதனைத் தொட்ரந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அப்துல் ரசாக்கை சமூக வலைதளங்களில் விமர்சித்தும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஆதரவாக பதிவிவிட்டனர்.

அப்துல் ரசாக் இந்திய வீரர்களை விமர்சித்தது முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவையும் அப்துல் ரசாக் விமர்சித்திருந்தார்.

 

 

ஆனால் தற்போது உள்ள வீரர்களிடையே பும்ரா ஒரு நல்ல பந்து வீச்சாளர் என்றும் அவர் கூறியுள்ளார். “தற்போது உள்ள வீரர்களில் பும்ரா சிறப்பாக செயல்படுகிறார். அவர் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளார். ஆனால் அவரது செயல்கள் மோசமாக உள்ளன. அவர் மோசமாக ஓடுகிறார். ஆனால் அவரது பந்து வீசும்விதம் சிறப்பானது. எனவே, அவர் திறமையானவர், ”என்றும் ரசாக் கூறினார்.

பும்ராவை தரக்குறைவாக பேசிய பாக் வீரர் அப்துல் ரசாக்: வச்சு செய்த இந்திய ரசிகர்கள் 3
ரஸாக், இந்திய கேப்டன் விராட் கோலி பற்றி பேசி இருக்கிறார். “1992 முதல் 2007 வரை இருந்த வீரர்களை கணக்கில் எடுத்து நீங்கள் பேசினால், கிரிக்கெட் என்ன என்பதை சச்சின், கோலி ஆகிய இருவரும் கூறுவார்கள். அந்த நேரத்தில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர். இப்போது உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை. பந்துவீச்சு, பேட்டிங் அல்லது பீல்டிங்கில் ஆழம் இல்லை”என்று அவர் கூறினார்.

“சச்சின் மதிப்பெண் பெற்றதைபோல விராட் கோலி மதிப்பெண் பெறுவார். ஆனால் நீங்கள் அவரை சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரிவில் வைக்க முடியாது. இவர் முற்றிலும் வேறுபட்டவர் ”என்று ரசாக் கூறினார்.

 

 

 

https://twitter.com/gaitonde07/status/1202528582473375745?s=20

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *