மும்பை மந்தமான பேட்டிங்: ராஜஸ்தானுக்கு 161 ரன் இலக்கு 1

தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூர் நகரில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இதனையடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ராஜஸ்தான் அணிக்கு ரகானேவுக்கு பதில் ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார். மீதமுள்ள போட்டிகளில் அவர்தான் கேப்டனாக தொடர்வார். தொடர் தோல்வியை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணி;

ரோஹித் சர்மா, குவிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், க்ரூணல் பாண்டியா, ஹர்த்க் பாண்டியா, கீரன் பொலார்டு, பென் கட்டிங், ராகுல் சாஹர், மாயன்க் மார்கண்டே, லசீத் மலிங்கா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

இன்றைய போட்டிக்கானராஜஸ்தான் ராயல்ஸ் அணி;

சஞ்சு சாம்சன், அஜிக்னியா ரஹானே, ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஆஸ்டன் டார்னர், ஸ்டூவர்ட் பின்னி, ரியான் பிராக், ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனாட்கட், தாவல் குல்கர்னே.மும்பை மந்தமான பேட்டிங்: ராஜஸ்தானுக்கு 161 ரன் இலக்கு 2

ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் இடம்பெறவில்லை. குழந்தை பிறந்துள்ளதால் அவர் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். பட்லர், சோதி, திரிபாதிக்கு பதிலாக ஸ்மித், ஸ்டோக்ஸ் மற்றும் ரியான் பராக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மும்பை அணியில் ஜெயந்த் யாதவுக்கு பதில் மயங்க் மார்கண்டே களமிறங்குகிறார்.

மும்பை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6இல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9இல் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க அந்த அணி முயற்சிக்கும்.மும்பை மந்தமான பேட்டிங்: ராஜஸ்தானுக்கு 161 ரன் இலக்கு 3

மும்பை அணியில் டிகாக், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு என பேட்டிங் வரிசை பலமானதாக உள்ளது. பந்துவீச்சிலும் பும்ரா, மல்லிங்கா உள்ளிட்டோர் பலமாக உள்ளனர். அதனைத் தொடர் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் அந்த அணி விளையாடும் எனத் தெரிகிறது.

 

 

https://twitter.com/Beyondaslam/status/1119575856064581632

https://twitter.com/SikandrKhosa/status/1119575838024970240

https://twitter.com/sivikas7/status/1119575831158743040

https://twitter.com/SilentGenius44/status/1119575829829132289

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *