அடித்து துவம்சம் செய்த டேவிட் வார்னர்: சன் ரைஸர்ஸ் 181 ரன் குவிப்பு!! 1

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 2-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முக்கியமான வீரர்கள் அனைவரையும் தக்கவைத்துள்ளது. மேலும் டேவிட் வார்னர் அந்த அணிக்குள் திரும்பி வந்துள்ளா.ர் அந்த அணியின் கேன் வில்லியம்சன் இன்னும் ஐபிஎல் தொடருக்கு வந்து சேராததால் நாளைய போட்டியில் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கேப்டனாக இருப்பார் என்று தெரிகிறது.அடித்து துவம்சம் செய்த டேவிட் வார்னர்: சன் ரைஸர்ஸ் 181 ரன் குவிப்பு!! 2

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு புவனேஸ்வர் குமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. மணிஷ் பாண்டே, 4. தீபக் ஹூடா, 5. சாயிப் அல் ஹசன், 6. விஜய் சங்கர், 7. யூசுப் பதான், 8. ரஷித் கான், 9. புவனேஸ்வர் குமார், 10. சந்தீப் சர்மா, 11. சித்தார்த் கவுல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கிறிஸ் லின், 2. உத்தப்பாக, 3. ஷுப்மான் கில், 4. நிதிஷ் ராணா, 5. தினேஷ் கார்த்திக், 6. அந்த்ரே ரஸல், 7. பியூஸ் சாவ்லா, 8. குல்தீப் யாதவ், 9. பெர்குசன், 10. கிருஷ்ணா, 11. சுனில் நரைன்அடித்து துவம்சம் செய்த டேவிட் வார்னர்: சன் ரைஸர்ஸ் 181 ரன் குவிப்பு!! 3

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபாரமாக ஆடி 181 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 53 ஆண்டுகளுக்கு 85 ரன்கள் குவித்து அசத்தினார். மற்றொரு தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 35 பந்துகளில் 39 ரன்களும் தமிழக வீரர் விஜய் சங்கர் 24 பந்துகளில் 40 ரன்களும் குவித்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 183 ரன்கள் குவித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

 

https://twitter.com/ibeingjai/status/1109787252194852865

https://twitter.com/The_IPL2019/status/1109787105021100033

https://twitter.com/farhin_18/status/1109786918064017408

https://twitter.com/crazy_mufc/status/1109786809502830593

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *