தவான் அதிரடி: 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி! ட்விட்டர் ரியாக்சன்! 1

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் டென்லி, சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே டென்லி டக் அவுட் ஆனார். முதல் ஓவரே மெயிடன் விக்கெட் ஆனது.

அணிகள்:

தில்லி கேபிடல்ஸ் : ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரியாஸ் ஐயர், ரிஷப் பன்ட் , கொலின் இங்ராம், கிறிஸ் மோரிஸ், ஆக்ஸார் படேல், ராகுல் திவாடியா, கீமோ பால், கிகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஜோ டென்லி, ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் , ஷுப்மான் கில், ஆண்ட்ரே ரஸல், கார்லோஸ் பிராத்வாட், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லாக்ஸி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா

தவான் அதிரடி: 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி! ட்விட்டர் ரியாக்சன்! 2

அதனையடுத்து, சுப்மன் கில், உத்தப்பா ஜோடி சேர்ந்து அடித்து விளையாடினர். உத்தப்பா 30 பந்தில் 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரானாவும் 11 ரன்னில் நடையைக் கட்டினார். சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் 34 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 39 பந்துகளில் 65 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.

தவான் அதிரடி: 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி! ட்விட்டர் ரியாக்சன்! 3

பின்னர், அதிரடி மன்னர் ரஸ்ஸல் வழக்கம் போல் சிக்ஸர்கள் விளாசினார். அவரது விளாசலில் ரன்கள் உயர்ந்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரஸ்ஸல் 21 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. 3 ஓவர் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 32 ரன்  எடுத்துள்ளது. பிரித்வி ஷா 14(7) ரன்னில் ஆட்டமிழந்தார்.

தவான் அதிரடி: 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி! ட்விட்டர் ரியாக்சன்! 4

டெல்லி அணி தரப்பில் ரபாடா, மோரிஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும் சாய்த்தார். 179 ரன்கள் என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.

 

இந்த ஐபிஎல் தொடரில் ரஸ்ஸல் தொடர்ச்சியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். 49*(19), 48(17), 62(28), 48*(13), 50*(44), 45(21) ரன்கள் எடுத்துள்ளார் ரஸ்ஸல்.

 

https://twitter.com/TheJinxKing18/status/1116765712259751937

https://twitter.com/LagbhagSecular/status/1116765664402755584

https://twitter.com/ShazaanSK/status/1116765660149735424

https://twitter.com/rk9158/status/1116765619263889409

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *