கடைசி நேரத்தில் தோனி அதிரடி: சென்னை 160 ரன் சேர்ப்பு! 1

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

சென்னை அணி முதல் 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தியது. இருப்பினும், முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணியிடம் தோல்வியைத் தழுவியது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், தோனி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ராயுடு, வாட்சன் ஃபார்ம் சென்னை அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.கடைசி நேரத்தில் தோனி அதிரடி: சென்னை 160 ரன் சேர்ப்பு! 2

இந்நிலையில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். சென்னை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குஜ்ஜிலிஜின் தனது அறிமுக போட்டியில் களமிறங்குகிறார். ஹர்பஜன் அணிக்கு திரும்பியுள்ளார். இந்தத் தொடரில் டு பிளிசிஸ் தனது முதல் போட்டியில் விளையாடுகிறார். பிராவோ, மோகித் சர்மா, ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பெறவில்லை.

பஞ்சாப் அணியில் கடந்த போட்டியில் விளையாடாத கிறிஸ் கெயில் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல், ஆண்டிருவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய முஜூப், ஹர்துஸ் வில்ஜோயின் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த பிராவோ, 2 வாரம் விளையாடமாட்டார் என்று சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே வேகப்பந்துவீச்சாளர்கள் லுங்கி நிகிடி, டேவிட் வில்லே இல்லாத நிலையில் பிராவோவும் இல்லாதது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறதுகடைசி நேரத்தில் தோனி அதிரடி: சென்னை 160 ரன் சேர்ப்பு! 3

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்:

அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர், ஸ்காட் குஜ்ஜிலிஜின், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள்:

கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான், டேவிட் மில்லர், மந்தீப் சிங், சாம் குர்ரன், ஆர்.அஷ்வின், ஆண்ட்ரு டை, முருகன் அஷ்வின், மொகமது ஷமி.

https://twitter.com/VMI_TamilNadu/status/1114497799897227265

 

https://twitter.com/KPrakan/status/1114497702929125376

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *