சுப்மன் கில், ரஸல் அதிரடி: கொலகத்தா 178 ரன் குவிப்பு! 1

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்றுள்ளனர். புள்ளி பட்டியலிலும் கொல்கத்தா அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

சுப்மன் கில், ரஸல் அதிரடி: கொலகத்தா 178 ரன் குவிப்பு! 2

 

அணிகள்:

தில்லி கேபிடல்ஸ் : ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரியாஸ் ஐயர், ரிஷப் பன்ட் , கொலின் இங்ராம், கிறிஸ் மோரிஸ், ஆக்ஸார் படேல், ராகுல் திவாடியா, கீமோ பால், கிகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஜோ டென்லி, ராபின் உத்தப்பா, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் , ஷுப்மான் கில், ஆண்ட்ரே ரஸல், கார்லோஸ் பிராத்வாட், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லாக்ஸி பெர்குசன், பிரசித் கிருஷ்ணா

டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 3இல் வெற்றி பெற்றுள்ளது. புள்ளி பட்டியலில் இந்த அணி 6வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் 22 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில், கொல்கத்தா அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. டெல்லி அணி 7இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணியில் சுனில் நரேன், கிறிஸ் லின் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக டென்லி, பிராத்வெய்ட் இடம்பெற்றுள்ளனர்.

சுப்மன் கில், ரஸல் அதிரடி: கொலகத்தா 178 ரன் குவிப்பு! 3

கொல்கத்தா அணியில் முக்கியமான வீரராக ரஸ்ஸல் திகழ்கிறார். அதிரடியாக விளையாடி அணிக்கு மிகவும் பலமாக உள்ளார். அதேபோல், தினேஷ் கார்த்திக், ரானா உள்ளிட்டோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். டெல்லி அணியில் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ், ரிஷப் பண்ட் உள்ளிட்ட இளம் வீரர்கள் பேட்டிங்கில் அவ்வவ்போது அதிரடியாக விளையாடுகின்றனர். பந்துவீச்சில் டெல்லி அணிக்கு பலமாக ரபாடா திகழ்கிறார்.

https://twitter.com/bindas_pari/status/1116736531903995904

https://twitter.com/iam_SreejithN/status/1116736402383708160

https://twitter.com/Azab_gazab/status/1116736317465841667

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *