கே.எல் ராகுல் அதிரடி சதம்: பஞ்சாப் 197 ரன் குவிப்பு! ட்விட்டர் ரியாக்சன் 1

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

மும்பை இண்டியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக உள்ளூர் வீரர் சித்தேஷ் லேட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்படுகிறார். இந்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தொடர்ச்சியாக சரியாக விளையாடாத நிலையில், அவர் அணியில் இடம்பெறவில்லை.

பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் காயம் காரணமாக அணிக்கு திரும்பவில்லை. அவருக்கு பதிலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், முஜிப் ரஹ்மானுக்கு பதிலாக விஜியோன் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணி 6 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி 5இல் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.கே.எல் ராகுல் அதிரடி சதம்: பஞ்சாப் 197 ரன் குவிப்பு! ட்விட்டர் ரியாக்சன் 2

அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள மும்பை அணி மூன்றாவது வெற்றியை நோக்கி களமிறங்குகிறது. பஞ்சாப் அணி கடைசியாக சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், கே.எல்.ராகுல், கிறிஸ் கெயில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினர். 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விவரம்:-

1. லோகேஷ் ராகுல், 2. கிறிஸ் கெய்ல், 3. கருண் நாயர், 4. சர்பராஸ் கான், 5. டேவிட் மில்லர், 6. மந்தீப் சிங், 7. அஸ்வின், 8. சாம் குர்ரான், 9. வில்ஜோன், 10. முகமது ஷமி, 11. அங்கித் ராஜ்பூட்.

மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

1. சித்தேஷ் லாட், 2. குயின்டான் டி காக், 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. குருணால் பாண்டியா, 6. பொல்லார்டு, 7. ஹர்திக் பாண்டியா, 8. ராகுல் சாஹர், 9. அல்ஜாரி ஜோசப், 10. பெரேண்டர்ப், 11. பும்ரா.

https://twitter.com/Cricketician_/status/1116013055706632192

https://twitter.com/modernlegacyy/status/1116013034361716738

 

https://twitter.com/imdearjayu/status/1116010103163875330

https://twitter.com/TrollNegativity/status/1116010087871475714

https://twitter.com/Gowthaman_Rockz/status/1116010074760077312

https://twitter.com/sagarshah87/status/1116010051167121408

https://twitter.com/colorless_man/status/1116010042476490753

https://twitter.com/JharnaKarfa/status/1116010003901452288

https://twitter.com/Sumanz13/status/1116009983890612224

https://twitter.com/proud_2beIndian/status/1116013056541302784

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *