பாண்டியா அதிரடி: மும்பை இந்தியண்ஸ் 170 ரன் குவிப்பு! ட்விட்டர் ரியாக்சன் 1

12வது ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டி மும்பை இண்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, முதல் பந்துவீச தீர்மானித்தார். சென்னை அணியில் மிட்செல் சன்ட்னெருக்கு பதிலாக மோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் மாற்றமில்லை. ஹர்பஜன் சிங் கடந்தப் போட்டியில் விளையாடவில்லை. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.பாண்டியா அதிரடி: மும்பை இந்தியண்ஸ் 170 ரன் குவிப்பு! ட்விட்டர் ரியாக்சன் 2

ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டுமே பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. இரு அணிகளும் தலா மூன்று முறை கோப்பையை வென்றுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் வேறு எந்த அணிகளுக்கு இடையிலான போட்டியை காட்டிலும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்குதான் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது ஓரளவுக்கு இந்தியா – பாகிஸ்தான் போட்டியைப் போன்றது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் தமிழகத்தில் மும்பை அணிக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள். தொடக்கத்தில் அதற்கு சச்சின் காரணமாக இருந்தார். தற்போது ரோகித் சர்மா இருக்கிறார். அதேபோல், தோனிக்கு எல்லா இடங்களிலும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேராக 26 முறை மோதியுள்ளன. அதில், மும்பை அணி 14 போட்டிகளிலும், சென்னை அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் சென்னை அணிக்கு சவால் தரும் அணியாக மும்பை இண்டியன்ஸ் உள்ளது என்பது தெரிகிறது. மும்பையில் நடைபெற்ற 11 போட்டியில் மும்பை அணி 6, சென்னை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சென்னையில் நடைபெற்ற 6 போட்டிகளில் மும்பை அணி 4, சென்னை அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.பாண்டியா அதிரடி: மும்பை இந்தியண்ஸ் 170 ரன் குவிப்பு! ட்விட்டர் ரியாக்சன் 3

இருப்பினும், இந்தத் தொடரில் சென்னை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மும்பை அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இதுவரை தோற்கடிக்கப்படாத அணியாக சென்னை அணி உள்ளது. வழக்கம் போல் மும்பை அணி கோலோச்சுமா அல்லது சென்னை அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

சென்னைக்கு எதிராக மும்பை அணியில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 547 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், மும்பைக்கு எதிராக சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா 599 ரன்கள் எடுத்துள்ளார்.

 

 

https://twitter.com/rmff7862/status/1113470780547923970

 

https://twitter.com/i_wasimm/status/1113470721043230720

https://twitter.com/shibam__d/status/1113470686238924800

https://twitter.com/kosigi_vijay11/status/1113470621336227840

 

 

 

https://twitter.com/PankajKOfficial/status/1113470710062604288

https://twitter.com/Shubh_Araambh/status/1113472085131550721

 

https://twitter.com/Mersal_GautamVj/status/1113472069226729472

https://twitter.com/ayushsmarty6/status/1113472077221158912

https://twitter.com/Shubh_Araambh/status/1113472085131550721

 

https://twitter.com/arti_316/status/1113472056383770625

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *