மீண்டும் சொதப்பிய பெங்களூர் அணி: டெல்லிக்கு 150 ரன்கள் இலக்கு! 1

டெல்லிக்கு எதிரான் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி முதல் பேட்டிங் செய்கிறது.

ஐபிஎல் தொடரின் 20வது போட்டியில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகின்றன. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ஏற்கனவே பெங்களூர் அணி 5 போட்டிகளில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசியில் உள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இன்றும் தோற்றால் அந்த மேலும் பரிதாப நிலையை அடைந்துவிடும். இருப்பினும் சொந்த மைதானம் என்பதால் அந்த அணி சற்று பலத்துடன் இருக்கும்.

அதே சமயம் டெல்லி அணியும் இன்றைய போட்டியில் வென்று தரவரிசை முதல் இரண்டு இடங்களுக்குள் செல்ல நினைக்கிறது. கடந்த போட்டியில் பெங்களூர் அணி ஃபீல்டிங்கில் சொதப்பியதால், இந்த முறை அந்த தவறு நடைபெறாமல் இருக்க தீவிர பயிற்சி எடுத்துள்ளது. டெல்லி அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.மீண்டும் சொதப்பிய பெங்களூர் அணி: டெல்லிக்கு 150 ரன்கள் இலக்கு! 2

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-

1. பார்தீவ் பட்டேல், 2. விராட் கோலி, 3. ஏபி டி வில்லியர்ஸ், 4. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 5. மொயீன் அலி, 6. அக்‌ஷ்தீப் நாத், 7. பவன் நெஹி, 8. டிம் சவுத்தி, 9. நவ்தீப் சைனி, 10. சாஹல், 11. முகமது சிராஜ்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

1. பிரித்வி ஷா, 2. தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. கொலின் இங்க்ராம், 6. ராகுல் டெவாட்டியா, 7. கிறிஸ் மோரிஸ், 8. அக்சார் பட்டேல், 9. ரபாடா, 10. இசாந்த் சர்மா, 11. சந்தீப் லாமிச்சானே.

‘இறுதிப்போட்டிக்கு கொண்டு செல்.. இல்லையேல் பெட்டிப் படுக்கையுடன் புறப்படு’; ஐபிஎல் ஒரு ‘கட் த்ரோட்’: பிராட் ஹாட்ஜ் பரபரப்பு
இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அன்று கொல்கத்தா சேஸ் செய்ததை வைத்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

விராட் கோலி, பார்த்திவ் படேல் இறங்கினர், இதில் பார்த்திவ் படேல் 9 ரன்களுக்கு கிறிஸ் மோரிஸ் பந்தில் கேட்ச் ஆகி ஏமாற்றமளித்தார்.மீண்டும் சொதப்பிய பெங்களூர் அணி: டெல்லிக்கு 150 ரன்கள் இலக்கு! 3

விராட் கோலி தன் முதல் ஷாட்டிலேயே கேட்ச் ஆகியிருப்பார், ஆனால் கிறிஸ் மோரிஸ் வீசிய பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் தவணுக்குத் தள்ளிச் சென்று பவுண்டரி ஆனது, ஆனால் அதன் பிறகு கோலி நிலைத்து ஆடி 18 ரன்களுடன் கிரீசில் இருக்கிறார்.

பார்த்திவ் அவுட் ஆனவுடன் டிவில்லியர்ஸ் களமிறங்கினார். முதலில் கிறிஸ் மோரிசின் ஷார்ட் பிட்ச் பந்தை மிட்விக்கெட் மேல் செந்தூக்கு தூக்கி சிக்ஸ் அடித்தார், பிறகு இஷாந்த் சர்மா பந்தை நடந்து வந்து கவர் திசையில் அருமையான பவுண்டரி அடித்து நன்றாக 17 ரன்களில் ஆடி வந்தார்.

அப்போது சக தென் ஆப்பிரிக்கா வீரரும் வேகப்புயலுமான ரபாடா வீச வந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை ரபாடா வேகமாக ஓடி வந்து மெதுவாக வீசினார் டிவில்லியர்ஸ் நேராக தூக்கினார், ஆனால் பந்து மட்டையின் அடியில் பட்டதால் தொலைவு செல்லாமல் லாங் ஆனில் இங்ரமிடம் கேட்ச் ஆனது, பின்னால் சில அடிகள் பின்னால் ஓடி கேட்ச் எடுத்தார்.

அதாவது பந்து வீசியதும் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா, பேட்ஸ்மேனும் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், கேட்ச் எடுத்த இங்ரமும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். இந்த தற்செயல் சுவாரஸ்யம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதற்கு முன்பாக நடந்திருக்கிறதா என்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

https://twitter.com/bksureshrao/status/1114862794208202754

https://twitter.com/jstutkarsh/status/1114862736473763840

https://twitter.com/AdilAsharR/status/1114862725010575360

https://twitter.com/chillrparty/status/1114862662410592256

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *