மீண்டும் படுதோல்வி அடைந்த கொல்கத்தா: ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி! 1

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 159 ரன்கள் சேர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 38லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர்.

மீண்டும் படுதோல்வி அடைந்த கொல்கத்தா: ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி! 2

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்ட ஆரம்பித்தனர். இவர்கள் இருவரும் முதல் ஒவரில் 10 ரன்கள் விளாசினர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒவரில் 18 ரன்கள் அடித்தனர். அதன்பின்னர் கலீல் அகமது மூன்றாவது ஒவரின் முதல் 3 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 2 பவுண்டரிகள் நரேன் விளாசி 7 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். எனினும் அந்த ஒவரின் நான்கவது பந்தில் நரேன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

மீண்டும் படுதோல்வி அடைந்த கொல்கத்தா: ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி! 3

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில்(3), நிதிஷ் ரானா(11)தினேஷ் கார்த்திக் (6) ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். மற்றொரு புறம் சிறப்பாக விளையாடிய கிறிஸ் லின் அரைசதம் கடந்தார். இவரும் ரிங்கு சிங்கும் 5ஆவது விக்கெட்டிற்கு 51 ரன்கள் சேர்த்தனர். அதன்பின்னர் ரிங்கு சிங் 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மீண்டும் படுதோல்வி அடைந்த கொல்கத்தா: ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி! 4

அடுத்த ஒவரிலே கிறில் லின் 47 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தப் போது கலீல் அகமது பந்துவீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ரஸல் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். இதனால் கொல்கத்தா அணி கடைசி 5 ஒவர்களில் வெறும் 43 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இறுதியில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஹைதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட் மற்றும் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட் சாய்த்தனர். அத்துடன் சந்தீப் சர்மா மற்றும் ரசீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

 

https://twitter.com/Mersal_GautamVj/status/1119960742612979714

https://twitter.com/_sujaykoner_/status/1119960647221911552

https://twitter.com/zoomharish15/status/1119960606075838464

https://twitter.com/Hamdam9097/status/1119960530423296000

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *