56 வயது ஹர்ஷா போக்ளே உங்களுக்கு ‘ப்ரோ’-வா? - ரஷீத் கான் மீது நெட்டிசன்கள் கடும் கேலி 1

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் ஒயிட்வாஷ் செய்ய பெரும் காரணமாக அமைந்த உலகின் தலைசிறந்த நடப்பு டி20 ஸ்பின்னர் ரஷீத் கான், இந்திய வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேயை ப்ரோ என்று விளித்தது ட்விட்டர் வாசிகளிடையே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை உள்ள போது ரஷீத் கான் அற்புதமாக பவுண்டரியே விட்டுக் கொடுக்காமல் முஷ்பிகுர் ரஹீமை முதல் பந்தில் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். இந்நிலையில் அவர் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

56 வயது ஹர்ஷா போக்ளே உங்களுக்கு ‘ப்ரோ’-வா? - ரஷீத் கான் மீது நெட்டிசன்கள் கடும் கேலி 2
Mumbai: Rashid Khan of Sunrisers Hyderabad celebrates fall of MS Dhoni’s wicket during the first qualifier match of IPL 2018 between Chennai Super Kings and Sunrisers Hyderabad at Wankhede Stadium in Mumbai on May 22, 2018. (Photo: IANS)

இதனையடுத்து ஹர்ஷா போக்ளே தன் ட்விட்டரில், “கடைசி 9 ஓவரில் 9 ரன்களை சிறப்பாகத் தடுத்து கிளீன் ஸ்வீப் கொடுக்கச் செய்தார் ரஷீத் கான். ரஷீத்தின் அபாரமான வளர்ச்சி இன்னொரு நிரூபணம்” என்று ட்வீட்டில் பாராட்டியிருந்தார்.

இதற்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்த ரஷீத் கான், ஹர்ஷா போக்ளேயை ப்ரோ என்று விளித்திருந்தார், “தேங்க் யூ ப்ரோ” என்று பதிவிட்டார்.

தன்னை விட 37 வயது பெரியவரை எப்படி ப்ரோ என்று அழைக்கலாம் என்று ட்விட்டரேட்டிகள் ரஷீத் கான் மீது பாய்ந்துள்ளனர்.

ப்ரோ என்கிறாரே ஒருவேளை இவருக்கு வயது 18 இல்லையோ 30 ஆக இருக்குமோ என்று ஒரு வாசகர் கிண்டலடித்துள்ளார்.56 வயது ஹர்ஷா போக்ளே உங்களுக்கு ‘ப்ரோ’-வா? - ரஷீத் கான் மீது நெட்டிசன்கள் கடும் கேலி 3

இன்னொரு நெட்டிசன், அவர் வயதென்ன உன் வயதென்ன மீண்டும் குறிப்பிடும் போது தவறு செய்யாதே என்று எச்சரித்துள்ளார்.

ஹர்ஷா போக்ளேவை ப்ரோ என்கிறீர்கள் இது உங்கள் உண்மையான வயதை அறிவிக்கிறது என்கிறார் இன்னொரு நெட்டிசன்.

இன்னொரு நெட்டிசன், “புகழ்பெற்ற ஒரு வர்ணனையாளர் என்ன உன் வகுப்பறைத் தோழனா?” என்று சாடியுள்ளார்.

இன்னொருவர் நகைச்சுவையாக இவருக்கு 18 வயது போக்ளேவுக்கு 81 வயதாக இருந்தால் 18 திருப்பிப் போடப்பட்டிருக்கிறது அவ்வளவுதானே அப்போது ப்ரோ தானே என்று கிண்டலடித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டர்வாசி, ‘ஹர்ஷா போக்ளேவுக்கு உங்களை விட கிரிக்கெட் அறிவு அதிகம் ரஷீத், ப்ரோ என்று அழைக்கலாமா என்று கேட்டுள்ளார்.

மிகவும் இயல்பாக, வேறு வார்த்தைப் பற்றிய யோசனையில்லாமல் ரஷீத் கான் கேஷுவலாகப் பயன்படுத்திய ஒரு வார்த்தைக்கு இத்தனை கேலிப்பதிவுகள்!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *