அஸ்வின், ரோஹித் சர்மா எங்கே!! ட்விட்டரில் ரணகளம்!! கோலி - ரவி சாஸ்திரி மீது ரசிகர்கள் கடுப்பு! 1

ஆண்டிகுவாவில் நடைபெறும் முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் இன்று நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

டாஸ் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ரன்கள் அதிக அளவில் குவிக்க சாதகமாக இருக்கும். மயாங்க் அகர்வால், கேஎல் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள்’’ என்றார்.அஸ்வின், ரோஹித் சர்மா எங்கே!! ட்விட்டரில் ரணகளம்!! கோலி - ரவி சாஸ்திரி மீது ரசிகர்கள் கடுப்பு! 2

இந்திய அணியில் அஸ்வின், சகா, குல்தீப் யாதவ், ரோகித் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மயாங்க் அகர்வால், 2. கேஎல் ராகுல், 3. புஜாரா, 4. விராட் கோலி, 5. ரகானே, 6. ஹனுமா விஹாரி, 7. ரிஷப் பந்த், 8. ஜடேஜா, 9. இசாந்த் சர்மா, 10. முகமது ஷமி, 11. பும்ரா.

 

 

https://twitter.com/GadhviLaxman/status/1164533845615448065?s=20

https://twitter.com/Something4510/status/1164535087838318602?s=20

https://twitter.com/SuryaForever5/status/1164537509855948800?s=20

https://twitter.com/omkarganda36/status/1164524910770675712?s=20

 

https://twitter.com/SriNani77126664/status/1164537484635623425?s=20

https://twitter.com/Just_Naniiiii/status/1164545516853583872?s=20

இதுகுறித்து காம்பிர் கூறுகையில் ‘‘நானாக இருந்தால் ஹனுமா விஹாரி தொடக்க வீரராக களம் இறக்க விரும்பமாட்டேன். வெஸ்ட் இண்டீஸ் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறனை பெற்றுள்ளார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் (Dukes) பந்துகளை பயன்படுத்தும் முடிவை எடுத்தது சிறந்தது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் கூக்கபுர்ரா பந்துகளை பயன்படுத்தியது. டியூக்ஸ் கிரிக்கெட் பந்துகள் இங்கிலாந்தில் தயாரிக்கப்படுகிறது.

கூக்கபுர்ரா பந்துகளை விட டியூக்ஸ் பந்துகளில் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்லும்போது ஆடுகளங்கள் பந்து வீச்சு மிகப்பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்தது. இந்தத் தொடரில் அது தொடரும் என நம்புகிறேன்.

இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியா கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரைத்தான் தொடக்க வீரர்களாக களம் இறக்க வேண்டும். நானாக இருந்தார் ஹனுமா விஹாரியை தொடக்க வீரராக களம் இறக்கமாட்டேன்’’ என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி முதல் இன்னிங்சில் 8 ரன்களும், 2-வது இன்னிங்சில் 13 ரன்களுமே அடித்தார். ஆனால், மயாங்க் அகர்வால் உடன் இணைந்து முதல் இன்னிங்சில் 18 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *