மீண்டும் கோலியை சீண்டிய ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர், இந்த முறை வச்சு செய்த இந்தியர்கள்!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் டென்னிஸ் ஃப்ரீட்மேன் மீண்டும் ட்விட்டரில் கேலி செய்து பதிவிட்டதற்கு, கோலியின் ரசிகர்கள் தக்க பதிலடியை அளித்தனர்.

ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் டென்னிஸ் ஃப்ரீட்மேன், விராட் கோலி மற்றும் இந்தியர்களை அடிக்கடி கேலி செய்தும், இழிவாகவும் சித்தரித்து தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்குபவர். விராட் கோலியை துப்புரவு பணியாளர் என கேலி செய்து தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை டென்னிஸ் ஃப்ரீட்மேன் சமீபத்தில் பகிர்ந்தார். அவ்வாறு பதிவிட்டதால், கோலியின் ரசிகர்கள் கோபம் கொண்டு அவரை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். அதுமட்டுமல்லாமல், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ”சாலையில் யானை நடந்து செல்லும்போது, அதனைப் பார்த்து பல நாய்கள் குரைக்கத்தான் செய்யும். விராட் கோலி ஒரு யானை. அதனால், இம்மாதிரியானவர்கள் கூறுவதற்கு கோலி எந்தவித எதிர்வினையும் ஆற்ற வேண்டிய அவசியமில்லை”, என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் டென்னிஸ் ஃப்ரீட்மேன், விராட் கோலியை கேலி செய்து மீண்டும தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதனால், கொதித்தெழுந்துள்ள விராட் கோலி ரசிகர்கள், அவருக்கு தக்க பதிலடியை சமூக வலைத்தளங்களில் அளித்து வருகின்றனர்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விராட் கோலி ஆச்சரியத்துடன் இருப்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்து, “நீங்கள் பேட்டிங் செய்ய கிளம்பும்போது, அங்கு பந்துடன் அமீர் நின்று கொண்டிருந்தால்.”, என பதிவிட்டிருந்தார். முகமது அமீர் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பகிர்ந்ததைக் கண்ட விராட் கோலி ரசிகர்கள் பலர், அப்பதிவின் கீழ் நகைச்சுவையான, கேலியான கருத்துகளை பதிவிட்டனர்.

கோலி ரசிகர் ஒருவர், “உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தானின் உணர்ச்சி இவ்வாறு இருக்கும்.”, என பதிவிட்டிருந்தார்.

மற்றொரு ரசிகர், “விராட் கோலி பேட்டிங் செய்ய வரும்போது, எந்த பந்தை வீசுவதென்று தெரியாமல் தவிக்கும் ஆஸ்திரேலியர்களின் முகபாவனை இதுதான், பாவம் ஆஸ்திரேலியர்கள்”, என கருத்திட்டார்.

Editor:

This website uses cookies.