தோனி இல்லாத சென்னை அணி சொதப்பல்! 1

ஐபிஎல் தொடரின் 33வது போட்டி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி ஓய்வெடுத்துள்ளதால், அவருக்கு பதிலாக சென்னையின் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா தலைமை ஏற்றுள்ளார். மேலும் சென்னை அணியில் கீப்பராக பில்லிங்க்ஸும், புதிய பவுலராக கேவி ஷர்மாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதுகுத் தசைப் பிடிப்பு காரணமாக தோனி இன்று விலகியுள்ளார்.  அவருக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராகச் செயலாற்றுவார். 2010-க்குப் பிறகு தோனி கேப்டனாக இல்லாமல் சிஎஸ்கே ஆடுகிறது. ரெய்னா கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளார்.தோனி இல்லாத சென்னை அணி சொதப்பல்! 2

இதற்கிடையே ஹைதராபாத் மைதானத்திற்குள் சென்ற சென்னை ரசிகர்களை, சிஎஸ்கே-வின் கொடியை எடுத்துச்செல்ல அனுமதியில்லை என்று அங்கிருந்த பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். இது நிர்வாக உத்தரவு என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை ரசிகர்கள் பலர் தாங்கள் கொண்டு வந்த கொடிகளை வெளியே விட்டுச்சென்றுள்ளனர்.

மேலும், சென்னை அணியின் தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் ஹைதராபாத் ரசிகர்கள் மட்டும் கொடியை உள்ளே கொண்டு சென்றுள்ளதாக குற்றச்சாட்டுகளையும் சென்னை ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-தோனி இல்லாத சென்னை அணி சொதப்பல்! 3

1. சாம் பில்லிங்ஸ், 2. அம்பதி ராயுடு, 3. ரெய்னா, 4. ஜடேஜா, 5. டு பிளிசிஸ், 6. இம்ரான் தாஹிர், 7. கரண் சர்மா, 8. தீபக் சாஹர், 9. சர்துல் தாகூர் 10. கேதர் ஜாதவ், 11. வாட்சன்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விவரம்:-

1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. விஜய் சங்கர், 5. யூசுப் பதான், 6. தீபக் ஹூடா, 7. ரஷித் கான், 8. நதீம், 9. புவனேஸ்வர் குமார், 10. சந்தீப் சர்மா, 11. கலீல் அகமது.

 

 

https://twitter.com/amisha_salman/status/1118546537074909184

https://twitter.com/jha_siddhus91/status/1118546110614843392

https://twitter.com/itsm_11/status/1118546326352850944

https://twitter.com/Sanjana9788/status/1118547437155565568

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *