தென்னாப்பிரிக்கவில் இரு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் ஸ்டேடியத்தில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்க பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியனில் உள்ள லாடியம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த கொலைகள் நடந்துள்ளது.
நேற்று முன்தினம் அதாவது 13 ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசமத்தனமான தாக்குதல் ஏன் நடைபெற்றதற்கான காரணத்தை அறிய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலின் இருவர் காயம் அடந்துள்ளர். மேலும், இருவர் கொல்லப்பட்டுள்ளனர். நிகோசி மற்றும் சார்லஸ் மசெகோ ஆகி இருவர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு வயது முறையே 24 மற்றும் 26 ஆகும்.
கே.எப்.சி மினி கிரிக்கெடின் ஒருங்கினைப்பாளர் ககிசோ மசுபெலேலி (27) மற்றும் லாடியம் மைதானத்தின் தலைமை பயிற்ச்சியாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓபெட் ஹார்வி அக்போமட்சி (27) ஆகியோர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றனர.
போலிஸ் தரப்பில் இருந்து வெளியான அதிகாரப்பூர்வ செய்தியில்,
கொல்லப்பட்ட இருவரும் ஸ்டேடியத்தின் மைதானத்தில் உள்ள அறையில் தங்கியிருக்கும் போது கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அவர்களது உடல்கள் குளியலறையில் கிடத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட இடத்தை, க்ளப்பில் உள்ள ஒரு உறுப்பினர் முதலில் பார்த்ததாகத் தெரிகிறது. அந்த நபர் தான் கொல்லப்பட்ட இருவரிடமும் தினமும் காலையில் கிரிக்கெட் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
இருவரது உடலும், அவர்களது குளியலறையில் கண்டெடுக்கப்பட்டது.
காயமடைந்த மற்ற இருவரும் கொடூரமகாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
கொலைச் சமபவத்தைப் பார்த்ததும் காவலாளிகள் தான் போலிசுக்கு தகவள் கொடுத்துள்ளனர். ஆனால், எதற்காக இந்த கொடூரமான கொலச் சம்பவம் நடைபெற்றது என இன்னும் அறியப்படவில்லை.
இதனைப்பற்றி, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் தலைவர் ஹசன் லார்கட் கூறியதாவது,
இது மிகவும் கடினமான ஒன்றாகும். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அனைவரது மத்தியிலும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
இமாதிரியான சம்பவம் க்ளப் கிரிக்கெட்டில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. நமது இளைய தலைமுறைக்கு இது நல்ல ஒரு ஆரோக்யாமான விசயம் அல்ல.
அனைத்தையும் தாண்டி, கிரிக்கெட் உலக கிரிக்கெட்டிற்க்கு இது வருத்தமான செய்தியாகும்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் நான் இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக் கூறினார்.
மேலும், இதனைப் பற்றி நார்தன் கிரிக்கெட் யூனியனின் தலைவர் ஜேக்குவஸ் ஃபால் கூறியதாவது,
இது நார்தன் கிரிக்கெட்ற்கு மிகச் சோகமான செய்தி. அவர்கள் நம் இளம் தலைமுறையினரின் அற்புதமான செயல்பாட்டிற்க்கு காரணமாக இருந்து வந்தனர். குறிப்பாக லாடியம் க்ளப்பிற்கு அவர்கள் அளித்த பங்கு மகத்தானது.
நார்த்தன் கிரிக்கெட் யூனியன் சார்பாக மிக ஆழந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரகளது குடும்ப சகிதத்திற்க்கு இறைவன் இவற்றை தாங்கும் சக்திகளை கொடுக்கட்டும் என ப்ராத்திக்கிறேன்.
எனக் கூறினார்.
இது போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைகள் ஆகும். அதுவும் மைதானத்திர்க்குள்ளேயே இரு புகுந்து கொலை செய்வது என்பது மிகவும் மோசமான ஒரு செயலாகும்.