'மழை மேல் மழை' உலகக்கோப்பை தொடரை பயமுறுத்தும் இங்கிலாந்து மேகங்கள்! 1

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. 10 அணிகள் மோதும் இந்த தொடரில் 45 லீக், 3 நாக் அவுட் உட்பட மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளது. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைந்து நாளை மறுநாள் உலகக் கோப்பைத் தொடர் தொடங்க உள்ளது. அனைத்து அணிகளும் பலமாக உள்ளதால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. தொடரை நடத்தும் இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளில் ஒரு ஒன்று தான் கோப்பையை வெல்லுமென அதிகம் கணிக்கப்பட்டுள்ளது.

'மழை மேல் மழை' உலகக்கோப்பை தொடரை பயமுறுத்தும் இங்கிலாந்து மேகங்கள்! 2

ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இப்போட்டியில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். முதல் அரையிறுதி ஆட்டம் ஜூலை 9-ஆம் தேதி மான்செஸ்டர் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்திலும், இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜூலை 11-இல் பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்திலும் நடைபெறும்  14-இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
பாரம்பரியமாக கிரிக்கெட் ஆடும் 8 நாடுகளுடன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவையும் மோதவுள்ளன. இரு அணிகளும் எதிரணிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது இங்கிலாந்து அணியின் தட்ப வெட்ப சூழலே. இங்கிலாந்தில் வானிலை மாற்றம் காரணமாக டாஸ் வெல்லும் அணியின் முடிவே வெற்றியை நிர்ணயிக்கிறது.

மே 26ம் தேதி நடைபெற இருந்த பாகிஸ்தான் – வங்கதேசம், தென்னாப்பிரிக்கா – வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கான 2 பயிற்சி ஆட்டங்களும் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டன.

'மழை மேல் மழை' உலகக்கோப்பை தொடரை பயமுறுத்தும் இங்கிலாந்து மேகங்கள்! 3

இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதிய பயிற்சி ஆட்டமும் மழையின் காரணமாக தாமதமானது.

இங்கிலாந்து வானிலையை பொறுத்தவரை எப்போது மழை பெய்யும், பனி பொழிவு அதிகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலையே உருவாகி உள்ளது. மழையின் தாக்கம் அதிகம் இருந்தால் போட்டியில் கணிக்க முடியாத பல திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்தின் வானிலை அனைத்து அணிகளுக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

 

https://twitter.com/cricketworldcup/status/1132566478690168833

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *