தோனிக்கு ஒரு அண்ணன் இருக்கிறாராம் அவர் பெயர் நரேந்திர சிங் தோனி என்று தற்போது ஒரு செய்தி இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இவரை பற்றி தோனி படத்தில் எதுவுமே வரவில்லை.
தோனிக்கு ஒரு அக்கா இருப்பதாக மட்டுமே காட்டப்பட்டு உள்ளது இதற்கு காரணம் என்ன வென்று யாருக்கும் தெரியவில்லை.
இது குறித்து நரேந்திர சிங் தோனி பேசியது :
நீங்கள் ஏன் தோனி வாழ்கை வரலாறு பற்றிய படத்தில் வரவில்லை என்று கேட்டதற்க்கு நரேந்திர சிங் தோனி கூறியது ” இது தோனியின் வாழ்க்கையை பெற்றிய படம், இதில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதை படத்தின் இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும் ” என்று நரேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
” நான் இந்த படத்தில் இல்லாத நிலையில் இருக்கலாம், ஏனெனில் மஹியின் வாழ்க்கையில் எனக்கு அதிக பங்களிப்பு இல்லை, அவரது குழந்தை பருவத்தில் முதல் அவர் உலகிற்கு சிறந்து விளங்கிய காலத்தில் இருந்து நான் அவர் வாழ்க்கையில் இல்லை”
” இந்த படம் தோனியின் வாழ்க்கையை பற்றிய படம் இதில் நான் இடம் பெற வேண்டும் என்பது அவசியம் இல்லை”
தோனியின் சகோதரர் என கூறப்படும் நரேந்திர சிங் தோனி புற்று நோயால் அவதி பட்டு உள்ளார் அவரின் உடம்பில் இருந்து மூன்று கட்டிகள் அகற்ற பட்டு உள்ளது.
ஆனால் இது குறித்து மஹேந்திர சிங் தோனி எதுவும் குறிப்பிடவில்லை, இதனால் இது உண்மை இல்லை இது ஒரு வதந்தியாக இருக்கும் எனவும் கூறிவருகிறார்கள்.
நரேந்திர சிங் தோனி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ள புகைப்படங்கள் :