ஆஸ்திரேலிய அணியில் விளையாட காத்திருக்கும் பாகிஸ்தான் வீரர் !!

ஆஸ்திரேலிய அணியில் விளையாட காத்திருக்கும் பாகிஸ்தான் வீரர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருதால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவனான அப்துல் காதரின் மகனான உஸ்மான் காதர், ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்க முடிவு செய்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான அப்துல் காதரின் மகனான, உஸ்மான் காதர் பாகிஸ்தான் இளம் அணியில் தனது பங்களிப்பை சரியாக செய்தாலும் சர்வதேச பாகிஸ்தான் அணியில் நீண்ட காலமாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடிய போதும் காரணமே தெரியாமல் நீண்ட காலமாக தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் வேறு வழியின்றி பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பதற்கான முயற்சியில் உஸ்மான் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து உஸ்மான் காதர் கூறியதாவது, “கடந்த 2012ம் ஆண்டே எனக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை கிடைத்தது. ஆனால் எனது தந்தையின் அறிவுரையின் படி அந்த குடியுரிமையை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இளம் பாகிஸ்தான் அணியில் சிறப்பாக செயல்பட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று எனது தந்தை நம்பினார், நானும் அவ்வாறு நினைத்தே ஆஸ்திரேலிய குடியுரிமையை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.

அதன் பின்பு கடந்த 2013ம் ஆண்டு விண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் எனது பெயர் இடம்பெற்றிருந்தது, ஆனால் காரணம் எதுவும் கூறாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென எனது பெயரை அணியில் இருந்து நீக்கிவிட்டது. அதற்கான காரணம் இப்பொழுது வரை எனக்கு தெரியவில்லை.

இதனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனக்கு இலக்கு மிக தெளிவானது. மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். 2020ம் ஆண்டு நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன். ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.