ஆஸ்திரேலியாவில் நடக்கும் மகளிர் பிக் பாஷ் லீக்கில் ஒப்பந்தம் செய்த மூன்றாவது இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை பெற்றார் இந்திய மகளிர் அணியின் நடுவரிசை வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. டிசம்பர் 9இல் இருந்து தொடங்கும் மூன்றாவது மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் ஹோபார்ட் ஹாரிகான்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி.
வேதா கிருஷ்ணமூர்த்திக்கு முன்பு ஏற்கனவே ஹர்மான்ப்ரீட் கவுர் மற்றும் ஸ்ம்ரிதி மந்தனா ஆகியோர் மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் ஒப்பந்தம் செய்து விட்டார்கள். ஹர்மான்ப்ரீட் கவுர் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்ய ஸ்மிரிதி மந்தனாவை வாங்கியது பிரிஸ்பேன் ஹீட் அணி. பிரிஸ்பேன் அணி மந்தனாவை வைத்துக்கொள்ளுமா என இதுவரை எதுவும் சொல்லாததால், மந்தனா விளையாடுவது சந்தேகம் தான்.
இந்த சலுகை ஒரு மாதத்திற்கு முன்பே வந்தது ஆனால் 10 போட்டிகளுக்கு மட்டுமே விளையாட இருப்பதாகவும் இந்திய அணியின் வேதா கிருஷ்ணமூர்த்தி உறுதி செய்தார்.
“அந்த ஆபர் எனக்கு ஒரு மாதத்திற்கு முன்பே கிடைத்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை இதனால் நான் சந்தோஷப்பட்டேன். அந்த நேரத்தில் நாங்கள் தென்னாப்ரிக்காவுடன் விளையாடவுள்ளதால், என்னால் பிபிஎல்-இல் விளையாடமுடியாது என்று நினைத்தேன்,” என கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
“தொடக்கத்தில், நான் முழு தொடரிலும் விளையாடவேண்டும் என்று கேட்டார்கள். ஆனால், தற்போது கடைசி கட்டங்களில் விளையாட முடியாததை ஒப்பு கொண்டார்கள். முதல் 10 போட்டியில் மட்டும் தான் என்னால் விளையாட முடியும்,” என வேதா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
மகளிருக்கான உலகக்கோப்பையில் 153 ரன், 54-பந்தில் 70 ரன் என பொளந்து கட்டினார் இந்திய அணியின் வேதா கிருஷ்ணமூர்த்தி.
“ஹர்மான்ப்ரீட் மற்றும் மந்தனாவிடம் என்ன எதிர்பார்ப்பது பற்றி பேசியிருந்தேன்.. இன்னொரு நாட்டு கலாச்சாரத்தில் விளையாடுவது உற்சாகமாக உள்ளது. இந்த தொடரை மேலும் ஊக்குவிக்க ஐசிசி-யின் வேலையாக தான் இருக்கும்,” என கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மாவும் ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.