கவுதம் கம்பிர், இந்தியாவிற்காக விளையாடிய ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்று சொல்லலாம். அவர் விரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோருடன் விளையாடியுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கவுதம் கம்பிர் 21வது கிடைத்த சிறந்த வீரரும் ஆவர். அவர் இந்தியாவிற்காக சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அணில் கும்ப்ளே மற்றும் மகேந்திர சிங்க் தோனி தலைமையில் விளையாடியுள்ளார்.
அவர் இந்தியாவிற்காக சில போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரண்டு ஐபில் கோப்பைகள் வாங்கி கொடுத்து, கொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார்.
இந்த ஐபில்-இல் இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா அணி 5 வெற்றியும் 2 தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியுள் 2-ஆம் இடத்தில உள்ளது. பிலே-ஆப் சுற்றுக்கு ஏறக்குறைய இந்த அணி தேர்வாகிவிட்டது.
ஐபில்-இல் சிறந்த கேப்டனாக விளங்கும் கம்பிரிடம், சிறந்த கேப்டன் யார் என்று கேட்டபோது,தோனி தான் சிறந்த கேப்டன் என்று சொன்னார் கம்பிர். சேவாக்குடன் இனைந்து பல அற்புதமான போட்டிகளை விளையாடியுள்ளார் கவுதம் கம்பிர்.