இந்த ஐபில்-இல் பெங்களூரு அணி 3 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில உள்ளது. கடந்த முறை விராட் கோலி மட்டும் தனியாளாக நின்று பெங்களூரு அணியை இறுதி போட்டி வரைக்கும் கூட்டிச்சென்றார்.
தோள்பட்டை காயத்தால் அவதி பட்டு வந்த கோலி, முதல் சில போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடவில்லை. இதனால் அவரது பார்மை அவர் இழந்து விட்டார் எனவும் கூறலாம். இந்த ஐபில்-இல் 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 250 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த ஐபில்-இல் அவரது அதிகபட்ச ஸ்கோர் 64 ஆகும்.
டெலலி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவேண்டும் என பொறுமையாக ஆடினார்கள் பெங்களூரு வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோலி. 48 ரன்னில் அவுட் ஆனார் கெய்ல், அவருக்கு பிறகு அரைசதம் அடித்துவிட்டு பெவிலியன் திரும்பினார் விராட் கோலி. ஆண்டர்சன் ஓவரில் அசால்ட்டாக சிக்சர் அடித்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தார்.
இந்த ஐபில் தொடர் முடிந்த பின்னர் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் தொடங்க போகிறது. இதற்காக சரியான நேரத்தில் பார்மிற்கு வந்தார் விராட் கோலி. பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளை மே 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இந்திய அணி எதிர்கொள்கிறது.
சாம்பியன்ஸ் ட்ராப்பியின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் ஜூன் 1-ஆம் தேதி விளையாடுகின்றனர். இந்தியா தனது முதல் போட்டியில் ஜூன் 4-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது.