இந்த கால கிரிக்கெட் வீரர்கள் திறமை இருந்தாலும் பல்வேறு கட்ட போட்டி பொறாமை சூது விமர்சனம் போன்றவற்றைத தாண்டியே அவர்களது அணியில் ஒரு நிரந்தர் இடத்தைப் பிடிக்கின்றனர். ஆனால், அதையும் தாண்டி பல சோதனைக் கட்டங்கள அவர்களை பாதிக்கத் தான் செய்கிறது.
இது போன்ற ஒரு சம்பவம் தான் பாகிஸ்தான் முதல் தர கிரிக்கெட்டில் நடந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரைச் சேர்ந்தவர் குலாம் ஹைடர் அப்பாஸ். இவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த, இவர் மிகத்திறமை வாய்ந்த பந்து வீச்சாளே ஆவார். பாகிஸ்தானிந் டிவிசன் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அடுத்தடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். ஆனால், இவரை தொடர்ச்சியாக லாகூரின் முதல் தரப் போட்டிக்கான அணியில் சேர்க்காமல் தேர்வாளர்கள் புறக்கணித்து வந்துள்ளனர்.

மேலும் லாகூர் அணியில் அவர் பெயர் இடம் பெற வேண்டுமானால் லஞ்சமாக பணம் மற்றும் பொருட்கள் தர வேண்டுமென தேர்வாளர்கள் கேட்டுள்ளனர்.
மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவரால் அவர்கள் கேட்கும் லஞ்ச பணத்தைக் கொடுக்க முடியவில்லை. இதனால், தொடர்ந்து அவரை அணியில் சேர்க்காமால் புறக்கணித்து வந்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த அப்பாஸ் தன்னை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து லாகூர் மைதானத்தில் முதல் தரப் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது தன் மேல் பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்துக்கொண்டார்.

பின்னர் அங்கிருந்த அனைவரும் சேர்ந்து அப்பாசை காப்பாற்றியுள்ளனர். இது குறித்து தான் குணமடைந்த பின்னர் அப்பாஸ் கூறியதாவது,
நான் க்ளப் மற்றும் டிவிசன் போட்டிகளில் நன்றாக பெர்ஃபாம் செய்தும் என்னை முதல் தரப் போட்டிக்கு தேர்வு செய்ய லஞ்சம் கேட்டு தொல்லை செய்தனர். என்னால் அவர்கள் கேட்கும் பணத்தை தர இயலவில்லை.

நான் தற்கொலை தான் செய்து கொள்வேன். இதற்கு காரணம் லாகூர் கிரிக்கெட் அனியின் தேர்வாளர்கள் தான். இதே லாகூரின் கடாபி மைதானத்திக்கு முன் மீண்டும் தீ குளித்து தற்கொலை செய்து கொள்வேன்.
என கண்ணீர் மல்க கூறினார்.