இலங்கையில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, நேற்று (ஆகஸ்டு 3)தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை எதிர்பார்ப்புடன் கண்டு வருகிறார்கள்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் 35 ரன்களிலும், ராகுல் 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி 13 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் ரஹானே நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
நேற்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்களை சேர்த்திருந்தது இந்திய அணி. புஜாரா 128 ரன்களுடனும், ரஹானே 108 ரன்களுடனும் இரண்டாம் நாள் போட்டியில் களமிறங்கினர். 133 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதன் தொடர்ச்சியாக ரஹானேவும் 132 ரன்களில் ஆட்டமிழந்தார்
இரண்டாவது நாளான இன்று ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி தப்பி தவறி எப்படியோ அந்த அக்னி பரிட்சை 20 ஓவர்களை வெரும் இரண்டு விக்கட்டுகளுடன் கடந்து சென்றுவிட்டது. நாம் மட்டும் இல்லை, அவர்களும் இவ்வாறு தான் நினைத்து சிரித்து கொண்டிருப்பர்கள் இந்நேரம். அவ்வளவு கடினமாக இருந்தது அந்த கடைசி 20 ஓவர்கள். நம்ம அஷ்வின் அவர்களை ஒரு கை பார்த்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.
இப்போது குஷல் மெண்டிஸ் 16 ரன்களுடனும் தினேஷ் சண்டிமால் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான பரபரப்பான இரண்டாவது டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 10 மணி அளவில் துவங்கியது. இரண்டாம் நாள் ஆட்டமான இன்று அஸ்வின்(54 ரன்கள்) மற்றும் சஹா(67 ரன்கள்) -வின் அரை சதத்தினால் 500 ரன்களை தாண்டியது. மேலும் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 500 ரன்களை தாண்டியது.
ஜடேஜா 70(85) ரன்கள், அடித்த போது அவர் தனக்கே உரிய பாணியில் கையில் வாள் உல்லது போன்று சுழற்றி சுழற்றி தனது அரை சதத்தை கொண்டடினார்.
அவருடைய கொண்டட்டத்தின் வீடியோ இணைப்பு கீழே :
உமேஷ் யாதவ் 8(9) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்தியா 158 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இதனையடுத்து, இலங்கை தனது முதல் இன்னிங்க்சை விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்கார்களாக டிமுத் கருணாரத்னே மற்றும் உபுல் தரங்க
களம் இறங்கினார்கள். அஸ்வின் வீசிய 2_வது ஓவரின் கடைசி பந்தத்தில் உபுல் தரங்க(0) கேட்ச் அவுட் ஆனார்.