தோனி ரிவ்யூ கேட்டாலே அது அவுட் தான் என நினைத்தவர்களுக்கு இது சற்று ஏமாற்றத்தை தந்த ரிவ்யூ தான். ஆம், ட்ராகிஸ் ஹெட் குல்தீப் யாதவ் பந்தை ஸ்வீப் செய்து ஆட நினைக்க, அந்த பந்து அவர் எதிர்பார்த்ததை விட சற்று தாழ்வாக சென்றது அது பேட்டின் நுனியில் பட்டது செல்ல, அந்த இடத்தில் சப்தமும் கேட்க அந்த பந்தை தோனி பிடித்து அப்பீல் செய்கிறார். அதை நாட் அவுட் என முடிவளிக்கிறார் ஆடுகள அம்பையர்.
உடனே கோலி ரிவ்யூ செய்கிறார். இதில் தோணி சொல்லியும் கேக்காமல் கோலி அதை ரிவ்யூ செய்கிறார். ரிவ்யூ செய்ததில் ஸ்னிக்கொவில் பார்த்த போது பந்து நுனியின் பக்கத்தில் தான் செல்கிறது ஆனால், பேட்டில் பட வில்லை என தீர்மானித்து தீர்ப்பளிக்கிறார்.
உடனடியாக பெருமூச்சு விடுகிறார் பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட், அதன் பின்னர் கோலி மற்றும் தோனி சற்று ஏமாற்றமடைகின்றனர். உடனடியாக ரிவ்யூ செய்வதில் ரியாக்சனுக்கு பெயர் போன ‘ப்ரெய்ன் ஃபேடு’ ஸ்மித் ஓகே என கையால் சிம்பாலிக்காக சிம்பல் காட்டுகிறார்.
இது போன்ற ரிவ்யூவில் வரும் முடிவுகளுக்கு ரியாக்சன் கொடுப்பதற்க்கு பெயர் போனவர் ஸ்டீவ் ஸ்மித். ஒரு மறை ட்ரெஸ்சிங் ரூமில் உள்ளவர்களைப் பார்த்து ரிவ்யூ எடுக்களாமா வேண்டாம என கேட்க முயற்சித்து அதை ‘ப்ரெய்ன் ஃபேடு’ என சமாளித்தது வேறு கதை.
தற்போது இந்த போட்டியில் ரிவ்யூவிற்கு அவர் கொடுத்த ரியாக்சன் கீழே :
கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு 243 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயம் செய்து உள்ளது.