விஜய் ஹசாரே தொடருக்கான ஹரியான அணி அறிவிப்பு
விஜய் ஹசாரே தொடருக்கான ஹரியான அணியை ஹரியான கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசரே தொடர் நடைபெறுவது வழக்கம். இதில் தங்களை நிரூபிக்கும் வீரர்களே ரஞ்சி கோப்பையில் இடம்பெறுவார், அதில் சோபிக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பை பெறுவார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடர் மூலம் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராட வேண்டும். இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை அமைத்து தரும் இந்த தொடரில் அடுத்த மாதம் துவங்குகிறது.
இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தங்களது அணியை அறிவித்து வருகின்றன. இதில் ஹரியான கிரிக்கெட் வாரியம் தனது அணியை அறிவித்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான அமித் மிஷ்ரா, ஹரியான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் 2007 டி.20 உலகக்கோப்பையில் பரப்பான இறுதி ஓவரை துல்லியமாக வீசி இந்திய அணிக்கு கோப்பை பெற்றுக்கொடுத்த ஜோஹிந்தர் சர்மாவும் ஹரியானா அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஹரியானா அணி நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி டிராபி மற்றும் ரஞ்சி டிராபியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததால், இந்த முறை நட்சத்திர வீரர்கள் பலர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மோஹித் சர்மா, ஜெய்ந்த் யாதவ், அமித் மிஷ்ரா என நட்சத்திர வீரர்கள் பலரை உள்ளடக்கியுள்ள இந்த அணி, இந்த விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இதே அணியே அடுத்து வரும் தியோடர் டிராபியிலும் இடம்பெறும்.
விஜய் ஹாசாரே தொடருக்கான ஹரியானா அணி;
அமித் மிஷ்ரா, மோஹித் சர்மா, அவி பரோட், ராகுல் திவான், அபிமன்யூ கோட், சன்னி சிங், குன்தஸ்வீர் சிங், குல்தீப் ஹூடா, ஹிமான்ஷு ரானா, சச்சின் ரானா, ஜெயந்த் யாதவ், நிதின் சைனி, ராகுல் தலால், சஞ்சய் பத்வார், ஆசிஸ் ஹூடா, ஹர்சல் பட்டேல், ஜோஹேந்தர் சர்மா, ராகுல் திவேடி.