ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக கேப்டன் பதவியை ஏற்கிறார் யுவராஜ் சிங்
விஜய் ஹசாரே தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனான ஹர்பஜன் சிங் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக முதல் இரண்டு போட்டிகளுக்கு யுவராஜ் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசரே தொடர் நடைபெறுவது வழக்கம். இதில் தங்களை நிரூபிக்கும் வீரர்களே ரஞ்சி கோப்பையில் இடம்பெறுவார், அதில் சோபிக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பை பெறுவார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடர் மூலம் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராட வேண்டும். இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை அமைத்து தரும் இந்த தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர் ஹர்பஜன் சிங் தனது தனிப்பட்ட விசயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் இருந்து ஓய்வு கேட்டுள்ளார்.
இதன் காரணமாக முதல் இரண்டு போட்டிகளுக்கான பஞ்சாப் அணியின் கேப்டனாக மற்றொரு சீனியர் வீரர் யுவராஜ் சிங்கை பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.
இந்த தொடருக்கான பஞ்சாப் அணியில், 19 வயதுகுட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பட்டையை கிளப்பிய சுப்மன் கில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
விஜய் ஹசாரே தொடருக்கான பஞ்சாப் அணி;
ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், அபிசேக் குப்தா, அபிசேக் ஷர்மா, மன்ப்ரீட் கோனி, குர்க்ரீட் சிங் மான், சித்தார்த் கவுல், கிண்டான்ஸ் கேரா, சாரட் லம்பா, மந்தீப் சிங், மயான்க் மர்கண்டே, சந்தீப் சர்மா, சுப்மன் கில், பரிண்டெர் சரன், மனன் வோஹ்ரா.