மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் உள்ள டுஸ்கேனியில் இருக்கும் சொகுசு விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். 4 ஆண்டு கால காதலுக்கு பிறகு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களுமே பங்கேற்றனர்.
இதற்கிடையே, கடந்த 21ம் தேதி புதுமண தம்பதியினர் இந்தியா திரும்பினர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதைத்தொடர்ந்து, டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி – அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இருவீட்டாரின் உறவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிலையில், மும்பையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் இன்று மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், அனில் கும்ப்ளே, சுனில் கவாஸ்கர், வீரேந்தர் சேவாக், உமேஷ் யாதவ்,குல்தீப் யாதவ், செடேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, சந்தீப் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரேகா, கங்கனா ரனாவத், கரன் ஜோகர் உள்பட பாலிவுட் பிரபலங்கள் இந்த விருந்தில் பங்கேற்று புதுமண தம்பதியரை வாழ்த்தினர்.
God bless. Two terrific human beings – @imVkohli @AnushkaSharma pic.twitter.com/2MXUHddVr2
— Ravi Shastri (@RaviShastriOfc) December 27, 2017
Congratulations to the lovely couple @AnushkaSharma and @imVkohli . Wish you a blissful life together. #VirushkaReception pic.twitter.com/Km7aDNxB2F
— Mohammad Kaif (@MohammadKaif) December 27, 2017
Wishing you both a lifetime of happiness together! Heartiest congratulations from my side.? @imVkohli @AnushkaSharma pic.twitter.com/Ddl6HkMBem
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) December 26, 2017
The spinners club!! Congratulations to @imVkohli bhai and @AnushkaSharma bhabhi.. Have a blessed life together. pic.twitter.com/UTKU8Z0suq
— Akshar Patel (@akshar2026) December 26, 2017
Saadi rosie phabie officially now ? wishing you both a partnership of lifetime ?❤️? @AnushkaSharma @imVkohli ☝? pic.twitter.com/9rVZd99Fbi
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 27, 2017
Congratulations to @imVkohli bhai and @AnushkaSharma bhabhi. God bless you both with a long and happy married life. pic.twitter.com/yIss5Rgly8
— Kuldeep yadav (@imkuldeep18) December 27, 2017
The worlds of cricket and cinema came together at the wedding reception of Anushka Sharma and Virat Kohli. Looked lovely together. Nice evening.
— Harsha Bhogle (@bhogleharsha) December 26, 2017
Mr and Mrs @arrahman at #VirushkaReception in #Mumbai pic.twitter.com/awRWLyEkUI
— Ramesh Bala (@rameshlaus) December 26, 2017