இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு இவர்தான் காரணம்: கேப்டன் விராட் கோலி புகழாரம் 1

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதன் மூலம், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி முஹ்டல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்தது. இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு இவர்தான் காரணம்: கேப்டன் விராட் கோலி புகழாரம் 2அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இண்ணிங்ஸை விளையாடிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டத்தில், தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் கேப்டன் கோலி 51 ரன்னில் ஆட்டமிழந்தார். துணை கேப்டன் ரஹானே சிறப்பாக விளையாடி 102 ரன்களும் விஹாரி 93 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் கோலி டிக்ளேர் செய்தார்.

இதையடுத்து, 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா பந்துவீச்சு புயலில் தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமர் ரோச் 38 ரன்கள் எடுத்தார். இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு இவர்தான் காரணம்: கேப்டன் விராட் கோலி புகழாரம் 3வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதியில் 100 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1 வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

 

போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி கூறியதாவது…

இதே இடத்தில் நாங்கள் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிய போதும் வெற்றி பெற்றிருந்தோம். இதனால் எங்களுக்கு ஆடும் போது நன்றாக இருந்தது. ஆனால் இந்த முறை இன்னும் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. அஜின்கியா ரஹானே இந்த போட்டியில் அற்புதமாக ஆடினார். 2 ஆட்டத்திலும் தன்னை நிரூபித்து விட்டா.ர் இந்த போட்டியின் வெற்றிக்கு அவர் தான் காரணம் என்று புகழாரம் சூட்டினார் விராட் கோலி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *