However, Kohli & Co. reclaimed the top spot following the convincing win in the first match of the six-match One-Day International series. India and South Africa are closely followed by England (116), New Zealand (115) and Australia (115)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிரான 6 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிதொடரின் முதல் ஒருநாள் போட்டி டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது. 269 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரஹானேவின் அசத்தல் ஆட்டத்தால் 4 விக்கெட் இழப்பில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். விராட் கோலி அடித்த 33-வது சதம் இதுவாகும்.
Virat Kohli (captain) of India celebrates his century during the 1st One Day International match between South Africa and India held at Kingsmead Cricket Ground in Durban on the 1st feb 2018 Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
மற்றொரு சிறப்பம்சமாக விராட் கோலி இந்த சதத்தின் மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக அதிகப்பட்சமாக கங்குலி இதுவரையில் 11 சதம் அடித்துள்ளார்.
நேற்று, கோலி சதம் அடித்ததன் மூலம் அதனைச் சமன் செய்துள்ளார். 142 போட்டிகளில் கங்குலி 11 சதம் அடித்து இருந்த நிலையில், விராட் கோலி 41 போட்டிகளிலேயே 11 சதம் அடித்து அசத்தியுள்ளார். கோலி இரண்டாவது பேட்டிங்கின்போது 20 சதங்கள் அடித்துள்ளார்.
Virat Kohli (captain) of India celebrates his century during the 1st One Day International match between South Africa and India held at Kingsmead Cricket Ground in Durban on the 1st feb 2018 Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
அதில், 18 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. ஒட்டுமொத்தமாக கேப்டனாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். ரிக்கி பாண்டிங் கேப்டனாக இருந்த சமயத்தில் 22 சதம் அடித்துள்ளார். இந்த பட்டியலில் 2 ஆம் இடத்தில் டி வில்லியர்ஸ் (13 சதங்கள்) உள்ளார்.