Cricket, India, Virat Kohli, Anushka Sharma, Marriage

நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான நடிகை அனுஷ்கா சர்மாவின் பிறந்த நாள் பரிசு குறித்து தான் எல்லோரின் பேச்சு.

நேற்றைய தினம்ம் அனுஷ்கா சர்மா தனது 30  ஆவது பிறந்தநாளை கிரிக்கெட் மைதானத்தில் கொண்டாடினார். என்னது மைதானத்திலையா என்று அதிர்ச்சி ஆக வேண்டாம். விராட் கோலியே அவரின் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு கிரிக்கெட் மைதானத்தில் தான் பிறந்தநாள் பரிசையே தந்தார்.அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு விராட் கோலி கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் இதுதான்! 1

ஐபிஎல் 2018, 31 ஆவது லீக் ஆட்டத்தில்,  பெங்களூரில் உள்ள  சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்- மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்டன.  இதில்,  கேப்டன் விராட் கோலி அணியான பெங்களூர் அணி அதிரடியாக ஆடி வெற்றிப்பெற்றது.

இந்த ஆட்டத்தின் முடிவில்  பேசிய விராட் கோலி, இந்த வெற்றியை தனது மனைவி அனுஷ்காவிற்கு சமர்ப்பித்தாக  தெரிவித்தார். அப்போது அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் பலத்த சத்தத்துடன் கத்தினார். உடனே, பெரிய ஸ்கீரினில் அனுஷ்கா சர்மாவிற்கு ஜூம் வைக்கப்பட்டது.  அனுஷ்கா உடனே வெட்கத்தில்   தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு விராட் கோலி கொடுத்த மிகப்பெரிய சர்ப்ரைஸ் இதுதான்! 2

விராட் பேசியாதவது, “ என் மனைவிக்கு இன்று பிறந்தநாள். அவரும் இங்கு வந்துள்ளார். இந்த வெற்றி அவரின் பிறந்தநாளுக்கு ஒரு சிறிய பரிசாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.  இதுக் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அனுஷ்கா சர்மா,  “ உலகத்திலியே சிறப்பான , அன்பான, தைரியமான மனிதருடன் கொண்டாடிய சிறந்த பிறந்த நாள் இது” என்று தெரிவித்துள்ளார்.

பிரபல இந்திய கிரிகெட் அணி வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் காதல் கதை இளைஞர்கள் மத்தியில் மிகவும் உன்னதமாக பேசப்பட்ட ஒன்றாகும். இவர்கள் காதலித்து வந்த காலங்களில், இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும்.

 

 

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதைக் கைவிடாத அனுஷ்கா சமீபத்தில் திகில் படத்திலும் நடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி தற்போது ஐபிஎல் போட்டியில், பெங்களுரு அணிக்கு விளையாடி வருகிறார். இருவருக்கும் உள்ள பிஸியான தருணத்தில் மீண்டும் இணையதளத்தில் புகைப்படம் பதிவேற்றம் செய்துள்ளார் விராட்.

மே 1ம் தேதியான இன்று அனுஷ்கா ஷர்மாவின் பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை இளம் ஜோடி இணைந்து கொண்டாடியுள்ளது. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் தனிமையில் அனுஷ்கா பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டத்தின் ஃபோட்டோவை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனது மனைவி க்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *