உலக அளவில் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியீடு!! கோலிக்கு 83வது இடம் - தோனியின் இடம் என்ன? 1

உலக அளவில் விராட் கோலிக்கு 83-வது இடம். மேலும், தோனி மற்றும் சச்சின் போண்ற வீரர்கள் இதில் இடம் பெறவில்லை. இந்தியாவில் இருந்து இடம் பெற்ற ஒரே ஒரு வீரர் கோலி மட்டுமே.

உலகிலேயே அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்று ‘போர்ப்ஸ்’ பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியீடு!! கோலிக்கு 83வது இடம் - தோனியின் இடம் என்ன? 2
I

அதேசமயம், அதிகமான ஊதியம் பெறும் வீரராக குத்துச்சண்டை வீரரும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான பிளாய்ட் மேவெதர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 83-வது இடத்தை பிடித்துள்ளார்.

 

விளையாட்டு வீரர்களில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலை பிரபல போபர்ஸ் நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உலக அளவில் 83-வது இடத்தில் உள்ளார். அவர் ஆண்டுக்கு ரூ.160.95 கோடி சம்பாதிக்கிறார்.உலக அளவில் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியீடு!! கோலிக்கு 83வது இடம் - தோனியின் இடம் என்ன? 3

சமீபத்தில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்பளத்தை உயர்த்தி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்து சம்பாதித்து வருகிறார்.

ட்விட்டரில் 2.50 கோடி பேர் விராட் கோலியை பின் தொடர்கிறார்கள் என்று போர்ஸ் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு பிசிசிஐ அமைப்பு விராட் கோலி உள்ளிட்ட 5 வீரர்கள் (A+)ஏபிளஸ் ஊதியம் பெறும் பட்டியலிலும் சேர்த்துள்ளது. இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.70 கோடி ஊதியம் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர முதல் 100 இடங்களில் என்பிஏ எனப்படும் கூடைப்பந்தாட்ட வீரர்கள் 40 பேர் அதிக ஊதியம் பெறும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்கன் ரக்பி எனப்படும் என்எப்எல் போட்டியில் விளையாடும் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மாட் ரியான் ஆண்டுக்கு 6.75 கோடி டாலர் ஊதியம் பெற்று 9-வது இடத்தில் உள்ளார்.உலக அளவில் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியீடு!! கோலிக்கு 83வது இடம் - தோனியின் இடம் என்ன? 4

போபர்ஸ் வெளியிட்ட இந்த பட்டியலில் முதலிடத்தை பிரபல குத்துச்சண்டை வீரரான மேவெதர் பிடித்துள்ளார். அவர் கடந்த ஆண்டு ரூ.1,900 கோடி சம்பாதித்து இருக்கிறார். இதில் பிரபல கால்பந்து வீரர்களான ரொனால்டோ, மெஸ்சி, கூடைப்பந்து வீரர் லீபீரன் ஜேம்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இப்பட்டியலில் பெண் வீராங்கனைகள் யாரும் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்த செரீனா வில்லியம்ஸ், ‌ஷரபாவா ஆகியோர் இப்பட்டியலுக்குள் வரவில்லை.

100 பேர் கொண்ட பட்டியலில் ஒரு வீராங்கனைகள் கூட இடம் பெறவில்லை. இதற்குமுன் பட்டியலில் இடம் பெற்றிருந்த சீனாவின் லீ நா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோரும் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை.உலக அளவில் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியீடு!! கோலிக்கு 83வது இடம் - தோனியின் இடம் என்ன? 5

பிரேசில் வீரர் நெய்மர் ஆண்டுக்கு 9 கோடி டாலர்கள் வருமானம் ஈட்டி, 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 7-வது இடத்திலும், கூடைப்பந்தாட்ட வீரர் லிப்ரான் ஜேம்ஸ் 6-வது இடத்திலும், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 20-வது இடத்திலும் உள்ளனர். கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் 16-வது இடத்திலும், ரோரி மெக்ராய் 26-வது இடத்திலும் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *