யம்மாடியோவ் !!! விராட் கோலி திருமணம் செய்த ஹோட்டலின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா??

கிருஸ்துமஸ் நாட்களில் இத்தாலியிலேயே இங்கு தான் அதிக கட்டணம் மற்றும் அதிக வசதிகள் உள்ளன.

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா திருமணம்குறித்த தகவல்கள் கடந்த ஒருவாரமாகவே ஊடகங்களை ஆக்கிரமித்திருந்த நிலையில், அதை அனுஷ்கா தரப்பு மறுத்திருந்தது. ஆனால், இத்தாலியின் டஸ்கானி நகரில் உள்ள விடுதி ஒன்றில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் திருமணம் நேற்று நடந்து முடிந்தது.

இந்த டாஸ்கானி ஹோட்டல் இத்தாலியின் 800 ஆண்டுகால ஒரு சின்ன கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் போர்கோ பினோச்சிட்டோ. இந்த சிறிய கிராமத்தை இந்த டஸ்கானி ஹோட்டல் நிறுவனர் எடுத்து சீரமைத்து இந்த ஹோட்டலை கட்டியுள்ளார்.

வருடம், ஆனால் கிருஸ்துமஸ் நாட்களில் இத்தாலியிலேயே இங்கு தான் அதிக கட்டணம் மற்றும் அதிக வசதிகள் உள்ளன. அப்படி எவ்வளவு கட்டணம் தெரியுமா,

இரு வாரம் முழுக்க இந்த ஹோட்டலின் வாடகை இந்திய மதிப்பில் ₹ 94,83,210, அதுவே ஒரு இரவிற்கு ₹ 13,54,744 ஆகும்.

திருமணம்குறித்த தகவலை அனுஷ்காவும் விராட் கோலியும் சமூக வலைதளங்களில் புகைப்படத்தைப் பதிவிட்டு உறுதிசெய்தனர். இதையடுத்து, உறவினர்களுக்காக டெல்லியில் வரும் 21-ம் தேதியும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாத்துறை நண்பர்களுக்காக மும்பையில் வரும் 26-ம் தேதியும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருமணத்துக்குப் பின்பும் அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டில் தொடர்ந்து நடிப்பார் என்று தெரிகிறது. திரைப்படங்களில் நடிக்க வசதியாக அனுஷ்கா ஷர்மா மும்பையில் தங்கியிருக்க வேண்டும் என்பதால், டெல்லியிலிருந்து விராட் கோலியும் மும்பையில் குடியேற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மும்பையின் ஒர்லி பகுதியில் உள்ள புதிய வீட்டில் விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினர் குடியேற இருப்பதாகத் தெரிகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வரும் ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்தப் பயணத்தின்போது, விராட் கோலியுடன் தென்னாப்பிரிக்கா செல்லும் அனுஷ்கா ஷர்மா, அவருடன் புத்தாண்டைக் கழித்துவிட்டு ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது

Editor:

This website uses cookies.