இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டனில் ஆகஸ்டு 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இப்போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும், 2-ஆவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்திருந்தார். இதனால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மொத்தம் 934 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க தொடரின் போது பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்துக்கு சரிந்தார். இதர இந்திய வீரர்களில் சேத்தேஷ்வர் புஜாரா 791 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலிக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கவுதம் காம்பீர், சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக் மற்றும் திலிப் வெங்க்சர்கார் டெஸ்ட் அரங்கில் முதலிடம் பிடித்துள்ளனர். 2011ம் ஆண்டு சச்சின் டெஸ்ட் அரங்கில் முதலிடம் பிடித்தார். அடுத்த 7 வருடம் கழித்து தற்போது விராட் முதலிடம் பிடித்துள்ளார்.
சுனில் கவாஸ்கர்
இந்தியாவின் முதல் ஜாம்பவான் இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.