அதெல்லாம் அந்த காலம்.. இனி நான்தான்: தோனியை மிஞ்சிய கோலி 1

அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமை விராத் கோலிக்கு கிடைத்துள்ளது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி, ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நடந்து வந்தது. இதில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஹனுமா விஹாரி சதமடித்து அசத்தினார். பின்னர் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 117 ரன்களில் சுருண்டது. பும்ரா, ஹாட்ரிக் எடுத்ததுடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தையும் 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.
2-ஆவது ஆட்டம் கிங்ஸ்டன் சபீனா பார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.அதெல்லாம் அந்த காலம்.. இனி நான்தான்: தோனியை மிஞ்சிய கோலி 2

299 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த போதும், பாலோ ஆனை வலியுறுத்தாமல் இந்தியா தனது 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது.

ரஹானே, ஹனுமா அரைசதம்:லோகேஷ் ராகுல் 6, மயங்க் அகர்வால் 4, புஜாரா 27, விராட் கோலி 0 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர். எனினும் துணை கேப்டன் ரஹானே 1 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 109 பந்துகளில் 64 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 8 பவுண்டரியுடன் 53 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

168 ரன்களுடன் டிக்ளேர்: இறுதியில் 54.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களுடன் டிக்ளேர் செய்வதாக கோலி அறிவித்தார். மே.இ.தீவுகள் தரப்பில் கெமர் ரோச் 3-28 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.

இதன் மூலம் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.அதெல்லாம் அந்த காலம்.. இனி நான்தான்: தோனியை மிஞ்சிய கோலி 3

இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம், அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமை விராத் கோலிக்கு கிடைத்துள்ளது. அவர் 27 போட்டிகளில் வென்ற முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்தார்.

60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து, 27 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார் தோனி. 48 போட்டிகளில் 28-வது வெற்றி யைப் பதிவு செய்துள்ளார் கோலி. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் 21 வெற்றிகளுடன் இருக்கிறார் ’தாதா’ கங்குலி.

இதேபோல் உலக அளவில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற பெருமையை ஸ்மித் (53 வெற்றி) பெற்றுள்ளார். 48 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில்  ரிக்கி பாண்டிங் உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *