அனுஷ்கா ஷர்மாவுடன் ஊர் சுற்ற கிளம்பிய விராட் கோலி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தனது காதலி அனுஷ்கா ஷர்மாவின் பிறந்தநாளை கொண்டாட அவருடன் சேர்ந்து சுற்றுலா சென்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் ஐபில்-இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனுமான விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருவது உலகத்துக்கே தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய 29-வது பிறந்த நாளை கொண்டாடினார் அனுஷ்கா ஷர்மா.

தனது காதலிக்கு என்ன பரிசு கொடுப்பார் என்று உலகமே எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், அன்று குஜராத்துடன் நடந்த போட்டியில் தோல்வி கண்டதால், தோல்வியையே பரிசாக கொடுத்தார் விராட் கோலி.

இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு அனுஷ்கா ஷர்மாவுடன் ஒரு குட்டி சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் ஏர்போர்ட்டில் ஒன்றாக இருக்கிற புகைப்படம் இணையத்தளத்தில் பரவி கொண்டு வருகிறது.

இந்த ஐபில்-இல் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் தகுதி இழந்து விட்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்நிலையில் விராட் கோலியும் சுற்றுலா சென்று விட்டதால், இனி வரும் போட்டிகளில் தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்க படுகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.