பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விராட் கோலி விளையாடவேண்டும் – பாகிஸ்தான் ரசிகர்கள்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலை சிறந்த வீரர்களில் ஒருவராக மாறிவிட்டார். அவரின் ரசிகர் படை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாப்ரிக்காவிற்கு சென்று முதல் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று அசத்தியது. இந்தியாவில் மட்டும் இல்லாமல், பாகிஸ்தானிலும் விராட் கோலி அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் யூனிடேட் மற்றும் க்வெட்டா க்ளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் வைத்திருந்த போஸ்டரில் “பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் நாங்கள் விராட் கோலியை பார்க்கவேண்டும்,” என எழுதியிருந்தது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடருடன் நிற்கிறது பாகிஸ்தான் சூப்பர் லீக். ரசிகர்களிடையே ஐபில் தொடர் அமோக வரவேற்பை பெற, பாகிஸ்தான் சூப்பர் லீக் ரசிகர்களை ஈர்க்கவில்லை. தற்போது நடந்து வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் 3வது சீசன் துபாயில் நடக்கிறது, ஆனால் அங்கிருக்கும் மைதானங்கள் காலியாகவே உள்ளது. இந்த முறை பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பிக்சிங் போன்ற தேவையற்ற நிகழ்வுகளை தவிர்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இன்னொரு ரசிகர், ‘பாகிஸ்தான் பிரதமர் கடத்தப்படுகிறார். கடத்தல்காரன் 1: ம்… ஆளில்லாத இடத்துக்கு கொண்டு செல்வோம். கடத்தல்காரன் 2: ஸ்டேடியத்துக்கு போ, அங்க யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று கலாய்த்துள்ளார்.

இன்னொருவர் ஐபிஎல் சீயர்ஸ்லீடர்சையும் பாகிஸ்தான் சியர்ஸ்லீடர்சையும் ஒப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.

இன்னொருவர், ஐபிஎல் மேன் ஆப் த மேட்ச் அவார்டாக தோனிக்கு ரூ.5 லட்சம் கொடுப்பதாகவும், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதுக்கு சாப்பாடு மட்டும் கொடுப்பதாகவும் கலாய்த்துள்ளார். இதே போல இன்னும் பலர் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.