வீடியோ… அம்பயருடன் ஆக்ரோஷமாக சண்டை போட்ட கேப்டன் கோஹ்லி..
தென் ஆப்ரிக்கா அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், வெளிச்சமின்மை காரணமாக போட்டியை பாதியில் நிறுத்திய அம்பயரிடம், இந்திய கேப்டன் கோஹ்லி ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து, தனது முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கோஹ்லி தனி ஒருவனாக போராடி 153 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீரரான மார்கம்(1), மற்றும் முக்கிய வீரர் ஆம்லா(1) ஆகியோரை பும்ராஹ் தனது அபார பந்துவீச்சு மூலம் வெளியேற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ், தென் ஆப்ரிக்காவின் மற்றொரு துவக்க வீரர் எல்கருடன் ஜோடி சேர்ந்து தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தபோது, மழை குறிக்கிட்டதால் போட்டி சில நிமிடங்கள் தடை பட்டது.
மழை நின்றபின் போட்டி துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் போட்டியை நிறுத்தி கொள்ள போட்டி நடுவர் அறிவுறுத்தியன் பேரில் வீரர்கள் அனைவரும் பெவிலியன் திரும்பினர்.
வீடியோ;
இதனால் கோவத்தின் உச்சிக்கே சென்ற கோஹ்லி, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை அழைத்து கொண்டு, போட்டி நடுவரிடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார்.
டிரஸிங் ரூமில் போட்டி நடுவரிடம் கோஹ்லி ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.